
நடிகர் விஜய் நடிக்கும் 68 வது படம் அரசியல் கருத்துக்களை உள்ளடக்கிய சமூகம் சார்ந்த திரைப்படமாக அமைய உள்ளதாக திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்காக வெங்கட் பிரபு கதையில் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளாராம்.
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயினுடைய 68வது படத்திற்கான புதிய தகவல்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
நடிகர் விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் படம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் ஜோதிகா ஆகிய இருவர் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இது மட்டும் அல்லாது நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் வர சனிக்கிழமை அன்று சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த மாதம் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் வழக்கறிஞர் அணி புதிதாக உருவாக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் மக்கள் இயக்கத்தின் தொடர் நடவடிக்கையின் மூலம் விஜய் அரசியலுக்கு வர இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் அதே வேளையில் விஜய்யின் 68வது படத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்து இருக்கிறது.
அதே சமயம் விஜய் தரப்பில் புதிதாக உருவாகும் படம் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய அரசியல் படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களாம். இதனால் வெங்கட் பிரபு படத்தின் கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் வரக்கூடிய டயலாக்குகளுக்கு கூடுதல் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு வருகிறதாம். இதனால் விஜயின் 68வது படத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்று சினிமா விமர்சகர்கள் முணுமுணுக்கின்றனர்.