என்னப்பா ஆச்சு ஆதிக்கு! சூட்டிங் ஸ்பாட்டில் சேட்டை!

என்னப்பா ஆச்சு ஆதிக்கு! சூட்டிங் ஸ்பாட்டில் சேட்டை!

ஹிப்ஹாப் தமிழா என்ற இசைக்குழுவின் முக்கிய கலைஞரான ஆதி, 2011 ஆம் ஆண்டில் யு-ட்யூப்பில் வெளியான "கிளப் லே மப்பு லே" பாடல் மூலம பிரபலமாக அறியப்பட்டார்.

பின்னர், 2012 ஆம் ஆண்டில், ஹிப்ஹாப் தமிழன் என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.

ஆரம்பத்தில் படங்களுக்குப் பாடுவதிலோ, இசையமைப்பதிலோ ஆர்வம் காட்டவில்லை என்றாலும், 2012ம் ஆண்டில் வெளியான 'நான்' படத்தில் விஜய் ஆன்டணி இசையில் 'தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடலை முதன்முதலாக பாடினார். பின்னர் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக திரைத்துறையில் நுழைந்து பின்னர் படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கவும் ஆரம்பித்தார்.

அவர் முதன்முதலாக எழுதி, இயக்கி நடித்த திரைப்படம்தான் 'மீசைய முறுக்கு'. இப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. அதைத் தொடர்ந்து வெளியான 'நட்பே துணை', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' என அவர் நடித்த படங்கள் பரவலான வெற்றியைப் பெற்றுளளன. சில படங்களே நடித்திருந்தாலும் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது அவர் 'வீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

'மரகத நாணயம்' படத்தை இயக்கிய எ.ஆர்.கே சரவன் இப்படத்தை இயக்க, 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், வினய் ராய், காளி வெங்கட், முனீஸ் காந்த் உட்பட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தினை தயாரிப்பாளர் டி.ஜி. தியாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளராக ஹிப்ஹாப் தமிழா இசைக்குழு இசையமைக்கிறது. இப்படம் ஜூன் 2ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்துவரும் நிலையில், படக்குழுவினருடன் இருக்கும்போது, 'ஹிப்ஹாப்' ஆதி குழந்தைகளுடன் சேர்ந்து பம்பரம் விட்டு விளையாடியுள்ளார்.

இதுகுறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதி பகிர்ந்துள்ள நிலையில், தற்போது 90's கிட்ஸ்களின் நினைவலைகளைக் தூண்டிய பம்பர வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com