படிக்காமல் வளைகுடா போகாதீர்கள்: ’பிளட் மணி’ பட இயக்குனர் சர்ஜுன்!

படிக்காமல் வளைகுடா போகாதீர்கள்: ’பிளட் மணி’ பட இயக்குனர் சர்ஜுன்!

.-ராகவ் குமார் 

ஜாக்கிரதை..இது மனிதர்கள் நடமாடும் இடம்'', ''ஐரா'' ஆகிய படங்களை இயக்கிய சர்ஜுன் தற்போது ஜீ தமிழ் தயாரித்த ''பிளட் மணி'' படத்தை இயக்கி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். இவரிடம் ஒரு மினி பேட்டி :

.வளைகுடா நாட்டிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கொலை பழியில் மாட்டிக்கொள்ளும் ஒன் லைன் கதை எடுக்க காரணமாக இருந்தது எது?

இந்த கதையை எனக்கு தந்து படாமக்க சொன்னதே ஜீ நிறுவனத்தினர்தான். பிளட் மணி கதை கருவை உருவாக்கியவர் நபில்  என்பவர். திரைக்கதை வசனம் எழுதியது சங்கர் தாஸ்.இக்கதை குவைத் மற்றும் இந்தியாவில் நடப்பதால் இதற்கு ஏற்றார் போல் விஷூவல் காட்சிகளை வடிவமைத்தேன். கதையில் ஹீரோயின் ப்ரியா பவானி சங்கர் ரெய்சல் என்று கிறிஸ்துவ பெண்ணாக  நடித்திருக்கிரார்.

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் சிலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதற்காக வளைகுடா நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லவில்லை. தாராளமாக செல்லுங்கள் ஆனால் நன்றாக படித்து விட்டு செல்லுங்கள் என்று சொல்கிறேன். நன்குப் படித்த, முறைப்படியான வேலைக்கு அங்கு செல்பவர்கள் பெரிய அளவில் பிரச்சனைகளை சந்திப்பதில்லை. எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்பவர்கள்தான் பிரச்சனைகளில் மாட்டிகொள்கிறார்கள். படிக்காமல் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பெரிய மரியாதை கிடையாது. அந்த நாட்டின் சட்டங்களை புரிந்து கொள்ள படிப்பறிவு தேவை. அதைத்தான் இந்த படத்தில் வலியுறுத்தியிருக்கிறேன்.

படம் இயக்கும் போது, வளைகுடா நாடுகள் பற்றி என்ன விதமான எண்ணங்கள் வந்து சென்றது.?

என்னை பற்றிய எண்ணம்தான் அதிக அளவில் வந்தது.நான் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த பின்  ,வேலைக்கு குவைத் செல்ல நேர்காணல் முடித்து  விட்டேன். ஆனால் சினிமா ஆசை வீட்டபாடில்லை. பெற்றோர்கள் வற்புறுத்தியும் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்ந்து விட்டேன்.அதனால் குவைத் நாட்டை பின்புலமாக கொண்ட இக்கதை களத்தில் என்னை சுலபமாக இணைத்து கொள்ள முடிந்தது.என் உறவினர்களில் பலர் வளைகுடா நாட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் சொல்லும் பல விஷயங்களும் படம் இயக்க உதவியாக இருந்தது.

இதேபோல் உங்களின் அடுத்த படங்களுக்கு மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து கதை வாங்கி படம் இயக்குவீர்களா?

கட்டாயமாக! முன்பு நான் ''கடல்'' படத்தில் உதவியாளராக வேலை செய்தபோது  எழுத்தாளர் ஜெயமோகனிடம் பழகிய அனுபவம் உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com