முன்னூறு நாட்கள் உழைத்த ரஜினி!

ரஜினி
ரஜினி

திலுமே ரொம்ப ஃபாஸ்ட்டான ரஜினி, இந்த படத்துக்காக மட்டும் ஒண்ணே முக்கால் வருஷத்தில் இருநூறு, முன்னூறு நாட்கள் ஒதுக்கி உழைத்திருக்கிறார். கேரக்டரை நன்றாக உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்றபடி, தன் மனத்தை டியூன் அப் செய்துகொண்டுவிட்டார். ரஜினி படங்களின் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் காட்சிகளின்போது தியேட்டரே அதிரும். இந்தப் படத்தில் கலக்கலான காமெடி காட்சிகளும் இருக்க வேண்டும் என்பதால், அக்காட்சிகளையும் இடம் பெறச் செய்தார் அந்த பிரம்மாண்ட இயக்குநர். புதுமையாக, பட்டிமன்ற ஹீரோக்களையும் நடிக்க வைத்தது பெரிய ப்ளஸ் பாயிண்ட்.

சினிமா என்பது ஒரு டீம் ஒர்க். அதில் ஒவ்வொருவரும் முழுமையான ஈடுபாட்டுடன், வித்தியாசமாகச் சிந்தனையுடனும், தங்கள் பங்களிப்பைக் கொடுத்தால்தான் ஒரு படம் வெற்றியடையும். இது எல்லோருக்கும் தெரியும்.

இந்த ரஜினி படத்திலோ, அகில இந்திய அளவில் முத்திரை படைத்த டைரக்டர் இணைய, சூப்பரா ஒரு புதிய காம்பினேஷன் உருவானது. இசையமைப்பாளரோ, உலக இசை சிம்மாசனத்தில் வீற்றிருப்பவர். கூடவே தேசிய விருதுகள் பெற்ற ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்ஷன் என்பது அவரது ரத்தத்தில் ஊறிவிட்ட ஒரு பிரபலம்… என்று, இவர்களின் கலவையில் ஒரு படம் உருவாகிறதென்றால், அதற்கு ஏற்றபடி ஒரு தயாரிப்பாளர் அமைய வேண்டுமல்லவா? அதுவும் ஒரு பிரம்மாண்டம்!

அந்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனரின் நூற்றாண்டு வேறு! இப்படிப்பட்ட ஒரு பெருமை மிகு தருணத்தில், இது போன்ற மிகப் பிரம்மாண்டமான படம் எடுப்பதற்கு ஏற்பாடுகள் தொடங்கின…

பி.கு:- என்ன நேயர்களே! படம் ‘சிவாஜி’ என்பதை கண்டுபிடித்து விட்ட உங்களுக்கு மற்றவர்கள் யார் என்பதை கண்டுபிக்க சொல்லித் தரணுமா என்ன ?

போட்டி :

1.ரஜினி நடித்த ஹாலிவுட் படத்தின் பெயர்?

2. ஓரே நேரத்தில், தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்ட ரஜினிப் படம் ? 

3. சிறந்த கதை ஆசிரியருக்கான  (story writer) விருதினை ரஜினிகாந்த் எந்த படத்திற்காக கொடுக்கப்பட்டது ? 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com