ரஜினியிஸம்!

ரஜினியிஸம்!

மிகக் குறுகிய கால கட்டத்தில், வறுமை, பசி, பட்டினி – இந்த விளிம்பு; அதேபோல் பணம், புகழ், பட்டம், அந்தஸ்து – இந்த விளிம்பு; இரண்டையுமே பார்த்த எனக்கு என்ன தெரிந்தது என்றால் திருப்தி என்பது பொருட்களில் கிடைக்காது. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். இன்ன பொருள் கிடைத்தால், நான் நிரந்தரமாய்த் திருப்தி அடைந்துவிடுவேன் என்பது முட்டாள்தனம். காரணம் அந்தப் பொருள் கிடைத்த சில காலத்துக்குள்ளேயே, அந்தத் திருப்தி மறைந்துவிடும். கண்டக்டராய் இருந்தபோது, நிறையப் பணம் சம்பாதிக்க வேண்டும். கார், பங்களா வாங்க வேண்டும் என்று கனவுகள் கண்டேன். அந்தக் கற்பனையில் ஏற்பட்ட சந்தோஷம், அவை நனவானபோது கிடைத்தாலும், நிலைக்கவில்லை. எல்லாமே நிரந்தரமில்லாதவை.

என் கடமைகளை நான் ஒழுங்காகச் செய்ய வேண்டும். அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய், மனைவிக்கு நல்ல புருஷனாய், பிள்ளைக்கு நல்ல அப்பாவாய், நண்பர்களுக்கு நல்ல சினேகிதனாய், நாட்டுக்கு நல்ல குடிமகனாய், யாரையும் துன்புறுத்தாமல், யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக் கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம். ஆக, அபிலாஷைகள் குறையக் குறைய நிம்மதி – சந்தோஷம் அதிகமாகிறது.

வாழ்க்கை ஒரு புத்தகம். அதன் முதல் சில பக்கங்களும், இறுதியில் சில பக்கங்களும் காணாமல் போயிருக்கின்றன. அவற்றைத் தேடுவதுதான் வாழ்க்கை. அதாவது, நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகப் போகிறோம் என்று நமக்குத் தெரியாது.

அதை அறிய முயல்வதுதான் வாழ்க்கை ஃபிலாசஃபி, அதாவது, தத்துவம். அதை அறிய முயலுபவன்தான் தத்துவஞானி. அதாவது, ஃபிலாசபர். காணாமல் போன பக்கங்களைப் பற்றிக் கவலைப்படாமல், கிடைக்கிற பக்கங்களை மட்டுமே படிப்பவன் சாதாரண மனிதன்.

ரஜினியிஸம் – ஒரே வரியில்...

Happiness Begins When Ambition Ends.

“நான் யோசிக்காம பேசமாட்டேன்; பேசின பிறகு யோசிக்க மாட்டேன்!”

போட்டி :

1. ரஜினி நடித்து 100 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்?

2. ரஜினியின் 73வது திரைப்படம் பெயர் என்ன?

3. ரஜினி கலெக்டராக நடித்த படம்?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com