ரஜினியின் 100வது படம் - ஸ்ரீ ராகவேந்திரா

ரஜினியின் 100வது படம் - ஸ்ரீ ராகவேந்திரா

ஆனால், ரஜினி சும்மா இருக்கவில்லை. அடுத்து, அந்த மாபெரும் தயாரிப்பு நிறுவன அலுவலகத்துக்குச் சென்று, பிரபல இயக்குனரைச் சந்தித்திருக்கார். அவரிடம், தன்னுடைய நூறாவது படம் ஸ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கையாக இருக்க வேண்டும். அந்தப் படத்தில், தான் அந்த மகானின் பாத்திரத்தில் நடிக்க வேண்டும்; அதை அந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தைச் சொல்லிவிட்டு, மற்றொரு இயக்குனரின் பெயரைச் சொல்லி, “அவர் இந்தப் படத்தை இயக்குவதற்குத் தயங்குகிறார். அவரிடம் நீங்கள்தான் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஓரிரு நாட்களில் அத் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து இந்த இயக்குனருக்கு அழைப்பு வர, அவர் அந்தத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சென்றுள்ளார். இரண்டு இயக்குனர்களும் கலந்து பேசுகின்றனர். “ரஜினி, ராகவேந்திரர் மீது கொண்ட பக்தி அளவில்லாதது. அவருடைய பாத்திரத்தில் ரஜினி நடிக்கிறபோது, அவர் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நடிப்பார். அதனால், அது ரஜினி படங்களிலேயே மிகவும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும். ரஜினி ரசிகர்கள் மத்தியில் அந்தப் படத்துக்கு நல்லதொரு வரவேற்பு இருக்கும். கமர்ஷியலாகப் படம் வெற்றி பெறுமா என்று உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது. தயவு செய்து அது பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். காரணம், ரஜினியின் சென்டிமெண்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் நான் (தயாரிப்பாளர்) இந்தப் படத்தை எடுக்கிறேனே தவிர, இதன் மூலமாக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்பது என்னுடைய நோக்கம் இல்லை. எங்கள் பேனரில் அந்தப் படத்தை எடுப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

பி.கு:- ரஜினியின் 100வது படம் – ஸ்ரீராகவேந்திரா

இணைந்த இரு திரையுலக ஜாம்பவான்கள்:

தயாரிப்பு நிறுவனம்: கவிதாலயா

தயாரிப்பாளராக : கே.பாலசந்தர்

இயக்குனராக: எஸ்.பி.முத்துராமன்

போட்டி :

1. ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த முதல் படம் எது ? 

2. ரஜினிகாந்த் நடித்த முழுநீள நகைச்சுவைப் படம் எது ?

3. ரஜினி, மூக்கையா என்ற கதாப்பாத்திரப் பெயர் ஏற்று நடித்த திரைப்படம் ?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com