பேச்சு ரிபீட்... உற்சாகம் அபீட்!.

பேச்சு ரிபீட்... உற்சாகம் அபீட்!.

  • பிளாக்கில் சினிமா டிக்கெட் வாங்குவது சகஜம். ஆனால், ஒரு படத்தின் வெள்ளி விழா இன்விடேஷனை பிளாக்கில் வாங்குவது கொஞ்சம் ஓவர்தான். இதிலும் சாதனைமுகியானது இந்தத் திரைப்படம்.. பிளாக் டிக்கெட் மாதிரியே நூறில் ஆரம்பித்து ஆயிரம் வரை வியாபாரம் அமோகமாய் அமர்க்களப்பட்டது.

  • விழாவுக்கு லேட் கம்மர் டைரக்டர் ஷங்கர்தான். அழைப்பிதழ் கிடைப்பதில் தாமதம் என்று கேள்விப்பட்டதும் பதறிப் போன ராம்குமார், உதவியாளர்களை வாசலிலேயே நிறுத்தி வரவேற்கச் சொல்லிவிட்டார். ‘சிவாஜி’யோட டைரக்டர்னா சும்மாவா?

  • அவ்வப்போது எடுத்து பார்த்துக்கொள்ள வசதியாக குரு சச்சிதானந்தாவின் போட்டோவை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொள்கிறார் ரஜினி. கூடவே புதிதாக ஷீரடி சாய்பாபாவின் போட்டோ!

  • மேடையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்ததை யாரோ ஒரு ரசிகர் கமெண்ட் அடிக்க, நயன்தாரா மூட் அவுட். பேசியவர்களெல்லாம் நயன்தாராவின் அழகைப் புகழ்ந்து தள்ள, சகஜ நிலைக்கு வந்து அம்மணியின் முகத்தில் டன் கணக்கில் வெட்கம்.

  • ஜோதிகா வரமுடியாமல் போனதன் காரணத்தை ராம்குமாரில் ஆரம்பித்து ரஜினி வரை நிறைய பேர் ரிபீட் செய்தார்கள். வழக்கமாக ரஜினி பட விழாவுக்கு வரும் கே.பி., பஞ்சு அருணாசலம், எஸ்.பி.முத்துராமன் மட்டுமல்ல... நடிகர் திலகம் குடும்பத்துக்கு நெருக்கமான கமலும் ஆப்ஸெண்ட்!

  • ‘176 தியேட்டர்களில் நூறு நாள் என்கிற சாதனையை எட்ட ரஜினி என்கிற பிராண்ட் நேம்தான் உதவியது’ என்று சொன்ன ராம்குமார், ‘தென் ஆப்ரிக்காவில் ரிலீஸாகி நூறு நாள் ஓடிய ஒரே படம் இதுதான்’ என்றார். ஏற்கெனவே மீடியாவில் அலசி ஆராய்ந்து கசக்கிப் போட்ட புள்ளி விவரங்களையே மேடையில் எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உதாரணத்துக்கு  அந்தப் பிரபல பாட்டில் மூன்றாவது ரிபீட் செய்தவர் யார் என்கிற மினி க்விஸ்ஸை முப்பது தடவையாவது மேடையில் நடத்தியிருப்பார்கள்!

  • பட ட்ரைலரில் தெலுங்கில் மாட்லாடிய விஷயத்தையே ஆங்கிலத்தில் பேசினார் மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ். நடிகர் திலகம் போலவே ரஜினியும் தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் சென்டர் என்பதை அழுத்திச் சொன்ன தாசரி, ரஜினிக்கும் தனக்கும் முப்பது வருஷத்து நட்பு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

  • விழாவில் கலந்துகொள்ள பெங்களூரிலிருந்து வந்திருந்த ரஜினியின் பழைய நண்பர்கள் முதல் வரிசையில் ஆஜர்! மூன்று முடிச்சில் தெரிந்த அதே ஃபையர், வேட்டையன் வரை இருக்கிறது என்று ஷங்கரின் பேச்சுக்கு நண்பர்கள் மத்தியில் படு ரெஸ்பான்ஸ். ‘கமலை வைத்து இயக்கிவிட்டு ரஜினியை வைத்து இயக்காவிட்டால் எந்தவொரு டைரக்டரின் சினிமா கேரியரும் கம்ப்ளீட் ஆகாது’ என்று சொல்லி கைத்தட்டலை அள்ளிக்கொண்ட ஷங்கர், சிவாஜி படம் பற்றி சின்ன டிரைலர் காட்டிவிட்டுத்தான் போனார்.

  • கேசட் ரிலீஸ் விழாவின்போது ரஜினி சொல்லியிருந்த யானை – குதிரை மேட்டரை திரும்பவும் திரையில் காட்டி, ரிபீட் செய்திருந்ததால் எதிர்பார்ப்பு எகிறிவிட்டிருந்தது. சீரியஸாக உட்கார்ந்திருந்த கூட்டத்தை ரிலாக்ஸ் செய்த ரஜினியும், நிறைய விஷயங்களை ரிபீட் செய்தார். தான் குதிரை போல எழுந்து நிற்கக் காரணமான ‘பாபா’ புகழ் சச்சிதானந்தாவுக்கும் அப்படி எழுந்து நின்றதோடு, தொடர்ந்து ஓடி நாட் அவுட்டுக்குக் காரணமாக இருந்த ரசிகர்களுக்கும் ரஜினி நன்றி சொன்னபோது கரகோஷத்தால் அரங்கு அதிர்ந்தது. ‘பாபா’ சறுக்கிய நேரத்தில் வந்த விமர்சனங்கள் பற்றிக் குறைபட்டுக் கொண்ட ரஜினி அரசியல் பற்றி கடைசி வரை வாய் திறக்கவே இல்லை.

  • ‘இன்னாபா... தலைவரு ஏதாவது புதுசா சொல்வாருன்னு வந்தா... கவுத்துட்டாரே’ ரஜினியின் பேச்சு பன்ச் இல்லாமல் ரிபீட் ஆனதால், நொந்து நூடுல்ஸான ரசிகர் கூட்டமும் உற்சாகம் தொலைத்து அபீட் ஆனது!

பின்குறிப்பு:  ‘சந்திரமுகி’ இருநூறாவது நாள் விழா மேடையில் அரங்கேறிய அட்டகாசங்கள் பலவற்றிலிருந்து மேலே, சில...

போட்டி :

1. "பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு எழுந்திரு மாமா" - இந்த பாடல் இடம்பெற்ற படம்?

2.ரஜினி sadistic காக நடித்த படம்?

3.ரஜினியின் மகளாக நடிகை மீனா நடித்த படம்?

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com