மோகன்லாலின் 'மான்ஸ்டர்' !

திரை விமர்சனம்!
mohan lal
mohan lal

தமிழில் டப் செய்யப்பட்ட மலையாள மொழித் திரைப்படமான 'மான்ஸ்டர்' தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பு : ஆசிர்வாத் சினிமாஸ், இயக்கம் : வைசாக்

நடிகர்கள் : மோகன்லால், ஹனிரோஸ், லட்சுமி மஞ்சு, சுதேவ் நாயர்.

மோகன்லால், இயக்குனர் வைசாக் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தான் இந்த மான்ஸ்டர்.

காலில் அடிபட்டு பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே குழந்தையை கவனித்துக்கொண்டு இருக்கும் கணவன் அனில் சந்திரா ( சுதேவ் நாயர்).கால் டாக்ஸி ஓட்டி குடும்பத்தை சிரமப்பட்டு நடத்தும் மனைவி பாமினி (ஹனிரோஸ்).

பாமினி மற்றும் அனில் சந்திரா தங்களது முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட நினைக்கின்றனர். அந்த நேரத்தில் ஒரு டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் பாமினி, விமான நிலையத்தில் லக்கி சிங்கை (மோகன்லால்) வரவேற்கும் பணி பாமினிக்கு கொடுக்கப்படுகிறது.

எதிர்பாராத விதமாக தனது நிறுவனத்தின் பார்ட்னர்களில் ஒருவரான (லக்கி சிங்க் ) மோகன்லாலை ஏர்போர்ட்டில் இருந்து பிக்கப் செய்து வரவேண்டிய நிலையில் மறுக்க முடியாத சூழலுக்கு ஆளாகிறார்.தான் வந்த வேலை முடிந்ததும் ஊர்சுற்றி பார்க்க நினைக்கும் மோகன்லால், ஹனிரோஸிடம் அவர்களது முதல் திருமண நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்ததை கேட்டு அவர்களது திருமண நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறேன் என கூறி அழையா விருந்தாளியாக அவர்கள் வீட்டுக்குள் நுழைகிறார்.

லக்கி சிங், பஞ்சாபில் பல சாதனைகள் புரிந்த தொழிலதிபர் என்று கூறி, பாமினியுடன் நட்பு கொண்டு, அவள் வீட்டிற்கு வந்து அவளது கணவனுடனும் குழந்தையுடனும் கலகலப்பாக பழகுகிறார். அவர்கள் வீட்டில் வேலை செய்யும் லட்சுமி மஞ்சுவுடன் சேர்ந்து சமையல் செய்து அசத்துகிறார் லக்கி சிங்.

பாமினி வேலைக்கு சென்றுவிட திடீரென அணில் சந்திரா கொல்லப்படுகிறார். அவரது டெட் பாடி பாமினியின் கார் டிக்கியில் கிடைக்க பாமினி கைது செய்யப்படுகிறார். குழந்தையும் காணாமல் போகிறது.

பாமினி கொலையாளியா? எதற்காக கொலை செய்கிறார் ? வேறு யார் கொலை செய்திருப்பார்கள் ? காரணம் என்ன என பல்வேறு திடுக்கிடும் திருப்பங்களை வைக்கிறார் இயக்குனர்.

மோகன்லால் வழக்கம் போல் அதிரடியாக நடித்து அதகளம் செய்கிறார். ஹனிரோஸ் மற்றும் லட்சுமி மஞ்சு நடிப்பும் அபாரம். கணவராக வரும் சுதேவ் நாயரும் அருமையான நடிப்பு.

மோகன்லாலின் ஆரம்ப கட்ட நகைச்சுவைகள் படத்தில் பெரிதாக ஒட்டவில்லை என்பது பெரிய குறையாக தெரிகிறது. பாமினியை போலவே நமக்கும் எரிச்சலை கிளப்புகிறது. இன்னும் கொஞ்சம் திரைக் கதையில் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம். பிளாஷ் பேக் கதையும் கொஞ்சம் மிகைப்படுதலாக தெரிவது படத்தில் சற்று தொய்வினை ஏற்படுத்துகிறது. படம் பார்க்கலாம் ரகம்...!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com