ஒரு தெக்கன் தள்ளு கேஸ் (மலையாளம்) - திரை விமர்சனம்!

மலையாள திரைப்படம்
ஒரு தெக்கன்  தள்ளு  கேஸ்
ஒரு தெக்கன் தள்ளு கேஸ்

- C.P செந்தில்குமார்.

இரு நபர்களுக்கு இடையே ஏற்படும் ஈகோ கிளாஸ் என்ன எல்லாம் பண்ணும் என்ற ஒரே ஒரு வரி முடிச்சை அடிப்படையா வைத்து எடுக்கப்பட்ட இரு மலையாளப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. 2019ல் ரிலீஸ் ஆன டிரைவிங் லைசென்சில் சுராஜ் வெஞ்சாரமூடு , பிரித்விராஜ் இருவரும் பிரமாதப் படுத்தி இருந்தார்கள், 2020ல் ரிலீஸ் ஆன அய்யப்பனும் , கோஷியும் படத்தில் பிருத்விராஜூம், பிஜீ மேனனும் அடி பொலி ஆக்சனில் இறங்கி இருந்தார்கள். இரு படங்களுக்கும் திரைக்கதை ஒருவரே! சச்சி.

மலையாள சிறுகதை எழுத்தாளரான ஜி ஆர் இந்து கோபம் எழுதிய அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ் எனும் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்தப்படமும் கேரளாவில் செம ஹிட். செப்டம்பர் மாதம் 7ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போ நெட் ஃபிளிக்சில் ரிலீஸ் ஆகி இருக்கு.

ஹீரோ ஒரு கடற்கரையோர கிராமத்தில் லைட் ஹவுஸ் பராமரிப்புப் பணியில் இருப்பவர். அவருக்கு ஒரு மனைவி அவங்க வீட்டுக்குப்பக்கத்தில் குடி இருக்கும் பெண்ணை வில்லன் காதிலிக்கிறார், அந்தப்பெண்ணும் தான்

இருவரும் ஹீரோ வீட்டுக்கு அருகே ஒரு நாள் இரவு தனிமையில் சந்திக்கும்போது ஹீரோ பார்த்துவிடுகிறார். வில்லனோட ஃபிரண்ட்ஸ் 5 பேரு ஆல்ரெடி ஹீரோவால் பாதிக்கப்பட்டவர்கள்.

திரைப்பட  விமர்சனம்
திரைப்பட விமர்சனம்

வில்லனுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்குது. அதை ஹீரோதான் முன் நின்று நடத்தி வைக்க இருக்கார். நிச்சயதார்த்தத்துல வில்லன் ஹீரோவை அவமானப்படுத்தறார்

ஒரு நாள் கிராமத்துக்கு வந்த ராஜ நாகம் பாம்பை வில்லன் பிடிக்கப்போறதா பில்டப் கொடுத்துட்டு இருக்கும்போது ஹீரோ இதெல்லாம் ஜூஜுபி மேட்டருனு வெறும் கையாலயே பாம்பைப்பிடிச்சு அடிச்சுக் கொன்னுடறார்.

இதனால மிகுந்த அவமானத்துக்கு ஆளான வில்லன் ஹீரோவைப்பழி வாங்கத்துடிக்கிறான். முகமூடி போட்டு வில்லன் தன் நண்பர்களோடு சேர்ந்து ஹீரோ குடிபோதையில் இருக்கும்போது அடிச்சுப்போட்டுவிடுகிறார்கள். போலீஸ் வந்து விசாரிக்கும்போது ஹீரோ அடிச்சவங்களை அடையாளம் தெரிலனு பொய் சொல்லிடறார்

தன் கையால தானே அவங்களைப்பழி வாங்கனும்னு நினைக்கறார். இதுக்குப்பின் திரைக்கதையில் ஏற்படும் திருப்பங்கள் தான் படம் ‘ ஹீரோவா பிஜூ மேனன் அசால்ட் பண்ணி இருக்கிறார்., ராஜ நாகத்தைப்பிடிக்கும் காட்சியில் அசத்துகிறார். மனைவியுடனான ரொமான்ஸ் காட்சியிலும் ஜொலிக்கிறார்

ஹீரோவின் மனைவியாக பத்மப்பிரியா. கணவனைக் காதலுடன் பார்க்கும்போதும் சரி ஊர் மக்கள் முன்னிலையில் பெருமையாகப் பார்க்கும்போதும் சரி கண்களாலேயே நடிக்கிறார். ஹாஸ்பிடலில் அவர் பதட்டப்படும் காட்சி அருமை

வில்லனாக ரோஷன் மேத்யூ கச்சிதமான நடிப்பு. இவருக்கு ஜோடியாக நிமிஷா சஞ்சயன். வழக்கமாக எல்லாப் படங்களிலும் உம்மணாம்மூஞ்சி கேரக்டராகவே இவருக்கு அமையும், இதில் சிரிச்ச முகமா இருக்கார். காதலனுடன் நெருக்கம் காட்டி நடித்திருக்கிறார். முத்தக்காட்சியும் இருக்கிறது.

ஒரு தெக்கன்  தள்ளு  கேஸ் 
 திரைப்படம்
ஒரு தெக்கன் தள்ளு கேஸ் திரைப்படம்

இவர்கள் 4 பேர் போக சின்னச்சின்ன கேரக்டர்கள் கூட மனதுல தங்கிடறாங்க. ஃபரஸ்ட் ஆபீசராக வருபவர் ஒவ்வொரு முறை ஊருக்கு வ்ரும்போதும் முள்ளம்பன்றி , பாம்பு என எதையாவது கொண்டு வந்து கலாட்டா பண்ணுவது கலக்கல் காமெடி

ஒரு பழி வாங்கும் கதை மாதிரி போகும் திரைக்கதைல வன்முறை எல்லாம் இல்லாம காமெடியாகக்கொண்டுபோய் இருப்பது பாராட்ட வைக்குது

காமெடி கலாட்டாவா போகும் திரைக்கதையில் ஹீரோ ஹீரோயின் மனஸ்தாபம், ஹீரோயின் அம்மா வீட்டுக்குப்போவது , அவரை சமாதானப்படுத்த ஹீரோ படாத பாடு படுவது என ஏற்படும் செண்ட்டிமெண்ட் சீன்கள் எதுக்கு? என நாம் யோசிக்கும்போது அதற்கான காரணத்தை ட்விஸ்ட் ஆக கொண்டு போனது இயக்குநரின் சாமார்த்தியம்

டைரக்சன் ஸ்ரீஜித் கச்சிதமான க்ரிஸ்ப் ஆன திரைக்க்தை அமைத்திருக்கிறார். ராஜேஷ் பின்னாடன். மது நீல்கண்டன் ஒளிப்பதிவில் கிராமத்துக்குளுமை கண்ணுக்கு இதம் . கன கச்சிதமான எடிட்டிங் மனோஜ் கன்னோத் சிறப்பாக செய்து இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com