லாஜிக் இல்லா மேஜிக் மசாலா;பீஸ்ட் பட விமர்சனம்!

லாஜிக் இல்லா மேஜிக் மசாலா;பீஸ்ட் பட விமர்சனம்!

–ராகவ் குமார்.

ஒரு கட்டிடத்தில் உள்ள மக்களை கடத்துதல், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தல், பாகிஸ்தானுக்கு சென்று தீவிரவாதியை சிறை பிடித்தல் என தமிழ் சினிமாவில் அத்துப்படியான பழைய ஃபார்முலா கதையை பீஸ்ட் படத்தில் விஜய்யை வைத்து சொல்லி இருக்கிறார் டைரக்டர் நெல்சன்.

ரா உளவு அமைப்பின் முன்னாள் அதிகாரியான வீர ராகவன் (விஜய் ), அதன் கேர்ள் பிரெண்டுடன் மால் ஒன்றுக்கு செல்லும்போது அங்குள்ள தீவிரவாதிகளால் பிணைய கைதியாக மக்களுடன் சேர்ந்து வைக்கப்படுகிறார்.

வீர ராகவனின் மூளை தப்பிக்க திட்டம் போடுகிறது. தீவிரவாதிகளுடன் மோதி, அவர்களை கொன்று பிணைக்கைதி மக்களை விடுவிக்க முயற்சிக்கிறார்.இதற்கு நடுவில் தீவிரவாதிகள் டிமாண்ட் செய்தபடி – திகார் சிறையில் இருக்கும் தீவிரவாத தலைவரை விடுவிக்கிறது இந்திய அரசு. இதை பொறுத்து கொள்ள முடியாமல் ராகவன் பாகிஸ்தானுக்கே சென்று,  விடுவிக்கபட்ட அந்த தீவிரவாதியை மறுபடியும் கைது செய்து தூக்கி வருகிறார்.

-இதுதான் பீஸ்ட் படத்தின் கதை!.

விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ பி எஸ், ராதா மோகன் இயக்கிய பயணம் என்று பல படங்களின் சாயல் பீஸ்டில் உள்ளது. அதிலும் இப்படத்தில் வரும் திகார் சிறை தீவிரவாதியைப் பார்க்கும்போது பயத்துக்கு பதில் சிரிப்பு வருகிற்து. அந்தளவு குழந்தைகளே சிரிக்கும் சர்க்கஸ் பபூன் போல உள்ளார். ஆனால் இதைப் பற்றியெல்லாம் அவ்வளவாக அலட்டிக் கொள்ளாமல், விஜய் மற்றும் அனிருத்தை நம்பி படம் எடுத்துள்ளார் நெல்சன். படத்தில் ஒரே ஆறுதல் – செல்வராகவன் நடிப்பும் வசனமும்தான்!

விஜய் வழக்கம் போல துரு துரு நடிப்பும் ஆர்ப்பாட்டமுமாக உள்ளார். பூஜா ஹெக்டே வழக்கம் போல வந்து போகிறார். வி டி வி கணேஷ் செய்யும் காமெடி கொஞ்சம் சிரிக்கலாம். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவும், நிர்மல் எடிட்டிங்க்கும் சண்டை காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

''ஒரு தடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்'' என்று விஜய் பலமுறை இப்படத்தில் சொல்கிறார். ரசிகர்கள் சார்பாக ண்-நாம் சொல்வது இதுதான்.. நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடியுங்கள் என்று ஒருமுறை கேட்டுக்கொள்கிறோம்.

மொத்தத்தில் பீஸ்ட் -லாஜிக் இல்லாத மேஜிக் மசாலா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com