கோவை சரளா - பிரபு சாலமன்
கோவை சரளா - பிரபு சாலமன்

'செம்பி'யில் பாட்டியாக நடிக்கும் கோவை சரளா!

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு சரியான கதாபாத்திரம் தந்தால் மிக சிறப்பாக நடிப்பார்கள். நகைச்சுவை நடிகையாக இருந்த கோவை சரளாவை கொங்கு தமிழ் பேசவைத்து, சதிலீலாவதி படத்தில் கமலுக்கு ஜோடியாக்கினார் பாலுமஹேந்திரா.

தற்போது கோவை சரளாவை வயதான பாட்டியாக நடிக்க வைத்து செம்பி என்ற படத்தை தரப்போகிறார் பிரபு சாலமன். பிரபு சாலமனுக்கு பிடித்த காடும், மலையும் தான் கதைக் களம். வயதான வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் சரளா.

செம்பி
செம்பி

ஒரு வயதான பெண்மணிக்கும், சிறுமிக்கும் இடையேயான அன்பின் பரிமாற்றம் தான் செம்பி. ட்ரைலர் வெளியாகி சில மணிநேரங்களில் பல லட்சம் மக்களை சென்றடைந்து உள்ளது.

அடுத்த மனோரமா என்ற பெயர் கோவை சரளாவிற்கு உள்ளது. இதை அவ்வப்பொழுது உறுதிப் படுத்துகிறார் சரளா. செம்பி படத்தில் நாஞ்சில் சம்பத், பழ. கருப்பையா என்ற இரு அரசியல்வாதிகளும் நடிக்கிறார்கள்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com