பீஸ்ட்டில் நடித்தது கனவு மாதிரி இருக்கு: சுஜாதா பாபு!

பீஸ்ட்டில் நடித்தது கனவு மாதிரி இருக்கு: சுஜாதா பாபு!

-பிரமோதா.

பீஸ்ட் படத்தில் நடிகை அபர்ணா தாஸின் அம்மாவாக நடித்தவரைப் பார்க்கும்போது, 'அட..இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.' என்று பலருக்கும் தோன்றியிருக்கும். அடுத்த நிமிடமே  'சன் டிவி நியூஸ் ரீடராச்சே இவங்க..' என்று பொறி தட்டியிருக்கும்..யெஸ்..சன் டிவி செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபுவேதான்! 

''எப்படி இருந்தது பீஸ்ட் பட அனுபவம்?"' – கேட்ட அடுத்த நொடி, 

''ஹைய்யோ.. அந்த இன்டர்வெல் பிரேக் மறக்கவே முடியாது'' என்று சிலிர்க்கிறார் சுஜாதா பாபு. இந்த படத்தில் தான் நடித்தது எப்படி என்று சொல்லத் தொடங்கினார்.

''பீஸ்ட் படம் குறித்த செய்தியை படித்து விட்டு வீட்டுக்கு போனால், அங்கே சர்ப்ரைஸ்.. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து எனக்கு  போன் கால்! ''உங்களை பீஸ்ட் படத்திற்காக தேர்வு செய்துள்ளோம்..படப்பிடிப்புக்கு தயாராகுங்கள்'' என்றார்கள். எனக்கு நம்பவே முடியவில்லை.. அதன் பின்னர் பீஸ்ட் படத்தில் நடித்ததெல்லாம் கனவு மாதிரி. அந்த படத்தில் விஜய்க்கு அம்மா ரோல் என்று செய்திகள் பரவ..விஜய் சாரும் செட்டில் 'என்ன நான் உங்க பையனாமே?'.என்று ஜாலியாக கலாய்த்ததெல்லாம் வேற லெவல்.உண்மையில், எனக்கு அபர்ணா தாஸின் அம்மா ரோல் .

படபடவென புன்னகைக்கிறார்

''அந்த கார் சீன்…?"'  என்று இழுத்தோம்

அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் நெஞ்சு படக் படக் என்கிறது..அந்த காட்சியை விவரிக்கும் போது ஒன்றும் தெரியவில்லை.. ஆனால் ஷூட்டிங்கில் கார் கண்ணாடி கதவை உடைத்து கொண்டு பாய்ந்த போது.. செம த்ரில்..பக்கத்தில் விஐய் சார்..வாழ்க்கையில் மறக்கவே முடியாது..

உங்கள் பாயசத்திற்கு விஜய் சார் ரசிகராமே? 

அபர்ணா தாஸ் பிறந்த நாள்க்காக ஸ்பெஷலாக செய்து கொண்டுபோய் கொடுத்தேன்.. எல்லோரும் சுவைத்துவிட்டு நன்றாக இருக்கு என்று சொன்ன போது அப்படி ஒரு மகிழ்ச்சி..அஃப்கோர்ஸ் விஜய் சாருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. (சுஜாதா பாபு முகத்தில் பூரிப்பு).

பீஸ்ட் படம் வெளியான முதல் நாள் அனுபவம்?

என்னை விட எனது கணவர்.. குடும்பத்தினர்..ப்ரெண்ட்ஸ் தான் ரொம்பவும் சந்தோஷப் பட்டார்கள்.. முதல் காட்சி படக்குழுவினரோடு.. இரண்டாவது முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரோடு..! சன் டிவியில் என்னுடன்  செய்தி வாசிக்கும்.. மகாலட்சுமி, தாட்சாயிணி, ஜெகதீஷ், நண்பன் கிரி ஆகியோர் பட்டாசு வெடித்துகேக் வெட்டி.. என்று அந்த நாளையே தீபாவளியாக்கி விட்டார்கள்..அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்து வாழ்த்தி உற்சாகப்படுத்தியதை மறக்க முடியாது.. 

உங்கள் கணவர் என்ன சொன்னார்?

அவர் இல்லாமல் இந்த சுஜாதா இல்லை.. என்னை முழுக்க முழுக்க ஊக்கப்படுத்தி..இந்த உயரத்தில் ஏற்றி அழகு பார்த்தவர் என் கணவர்தான்! ..'யூ கேன்..உன்னால் முடியும்' என்று என்னை எனக்கே அறிமுகப படுத்தியவர் பாபு..இந்த புகழ் வெற்றி.. பாராட்டு அத்தனைக்கும் சொந்தமானவர் அவர்தான். (கணவரின் அன்பில் நெகிழ்ந்தார்)

படப்பிடிப்பின் போது சுவாரஸ்யம் ஏதாவது உண்டா?

ஆஹா மறக்கவே முடியாத பல நிகழ்வுகள் உண்டு.. சாம்பிளுக்கு ஒன்று.. லஞ்ச் இடைவேளையின் போது எல்லோருக்கும் விதம் விதமாக அசைவ உணவு சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள்.. நான் மட்டும் ஒரு ஓரமாக அமர்ந்து தயிர் சாதம்.. ஊறுகாய் என்று சைவ உணவு சாப்பிடுவேன். இதை கவனித்த ஹீரோயின் பூஜா ஹெக்டே..மறுநாளிலிருந்து அவரது வீட்டில் இருந்து தினமும் எனக்காக சைவ உணவு சமைத்து கொண்டு வர ஆரம்பித்தார். என்னெவொரு அன்பு?! தினமும் சாம்பார்.. சிகப்பு பூசணி கூட்டு என்று வெரைட்டி வெரைட்டியாக செய்து கொன்டுவந்து தந்து அசத்தி விட்டார்.. 

என்று ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சுஜாதாவிடம் விடைபெற்றோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com