0,00 INR

No products in the cart.

கதம்பமாலை

கல்யாண சுந்தர விரதம்!

சிவபெருமானின் அருள் பெற கடைபிடிக்க வேண்டிய விரதங்களில் ஒன்று கல்யாண சுந்தர விரதம். பங்குனி உத்திர நாளன்று இந்த விரதத்தை மேற்கொண்டால் திருமணத் தடைகள் அகலும்.

காமாட்சியம்மன் திருக்கல்யாணம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் திருமணம் பங்குனி உத்திரத்தன்று விமரிசையாக நடைபெறும். அதே சமயத்தில் பல பக்த ஜோடிகளுக்கும் அச்சமயம் திருமணம் நடைபெறும்.

பாத தரிசனம்!

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜப் பெருமானின் உத்ஸவர் திருமுகத்தை மட்டுமே தினமும் பக்தர்கள் தரிசிக்க முடியும். பங்குனி உத்திரத்தன்று மூலவர் பெருமானின் வலது பாத தரிசனமும், மார்கழி திருவாதிரையன்று இடது பாத தரிசனமும் கிடைக்கும்.

பங்குனி உத்திர உலா!

ழனி, ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவின்போது நடைபெறும் பத்து நாள் உத்ஸவத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் பவனி வந்து அருள்பாலிப்பது வழக்கம்.

அம்மனுக்குப் பொங்கல் வழிபாடு!

சிவகங்கை, தாயமங்கலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு பங்குனி மாதம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவது விசேஷம்.

ஆண்டாளைப் போலவே அம்பாள்!

ரூரில் அருளும் ஸ்ரீ கல்யாணபசுபதீஸ்வரர் கோயிலில் அம்பாள் சௌந்தர நாயகியின் ஊரான அப்பிப்பாளையம் என்ற கிராமத்துக்கு பங்குனி மாதம் ஆறாம் நாள் ஈசன் எழுந்தருளும் விழா சிறப்பாக நடைபெறும். காரணம், அம்பாள் சௌந்தர நாயகி, ஆண்டாள் நாச்சியாரைப் போலவே தவமிருந்து இறைவன் பசுபதீஸ்வரரை திருமணம் செய்து கொண்டதுதான்.

தெப்பத் திருவிழாவும்; தேர்த்திருவிழாவும்!

திருச்சி, மலைக்கோட்டை ஸ்ரீ தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி, சித்திரை மாதங்களில் தெப்பத் திருவிழாவும் தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெறும்.

எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கதம்பமாலை

0
தொகுப்பு : நெ.இராமன் சனி பகவானுக்கு பாகற்காய் மாலை! வேலூர் மாவட்டம், வன்னிவேடு அகத்தீஸ்வரர் ஆலயத்தில் சனி பகவானுக்கு 17 பாகற்காய்களை மாலையாகக் கோர்த்து சாத்தி வழிபடுகின்றனர். அதனால் வீடு கட்ட ஏற்படும் தடைகள் விலகுவதாக...

ஸ்ரீராம நவமி துளிகள்!

0
- எஸ்.ராஜம் * கும்பகோணம், ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில் ஸ்ரீராம நவமி உத்ஸவம் பத்து நாட்கள் தேர்த்திருவிழாவுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் ஸ்ரீராமபிரான் சீதா தேவியுடன் ஒரே ஆசனத்தில் அமர்ந்த நிலையில் பட்டாபிஷேகத் திருக்கோலத்தில்...

உயிரோடிருந்தால் சுகிக்கலாம்!

- ராஜி ரகுநாதன் ‘ஜீவன் பத்ராணி பஸ்யந்து’ என்கிறது வால்மீகி ராமாயணம். ‘உயிரோடிருந்தால் சுகங்களைப் பார்க்கலாம்’ என்பது இதன் பொருள். ஸ்ரீமத் ராமாயணம் சுந்தர காண்டத்திலுள்ள வாக்கியம் இது. அவநம்பிக்கையையும் ஊக்கமின்மையையும் நம் சனாதன தர்மம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
​பணிவு தண்ணீர் இறைக்கும் ஏற்றம் பணிவதனால்தான் கிணற்றிலுள்ள நீரை முகர்கிறது. அதுபோல், ஆன்றோர்களிடம் பணிந்தால் அவர்களிடம் தேங்கிக்கிடக்கும் அறிவு வெள்ளத்தை நாம் முகர்ந்து கொள்ளலாம். ​கூப்பிடும் தொலைவும்; எட்டிய தொலைவும்! கஜேந்திரன் மகாவிஷ்ணுவை நினைத்துக் கூப்பிட்டான். உடனே...

அஷ்டாம்ச ஆஞ்சனேயர்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் வாயு புத்திரரான ஆஞ்சனேயர் எட்டு விதமான சிறப்பு அம்சங்களைக் கொண்டவர் என்பதால் இவர், ‘அஷ்டாம்ச ஆஞ்சனேயர்’ என அழைக்கப்படுகிறார். வழிபடும் பக்தர்களுக்கு வாழ்வில் வளம் தரும் அந்த எட்டு விதமான அம்சங்கள்...