0,00 INR

No products in the cart.

சித்திரைச் செய்திகள்

தொகுப்பு : ஆர்.ராஜலட்சுமி

*சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இம்மாதம், ‘சைத்ரா’ சைத்ர விஷு என்றும் அழைக்கப்படுகிறது. அன்றுதான் பிரம்மா இவ்வுலகைப் படைத்தார் என்கிறது புராணம்.

* சித்ரா பௌர்ணமியன்று ஈசனுக்கு சுத்தான்னம் எனப்படும் வெண் சோற்றில் நெய் கலந்து நைவேத்தியம் செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும். இன்று அம்பிகைக்கு பூப்போட்ட வஸ்திரம் சாத்தி பத்மராகம் என்ற நவரத்தினங்கள் பதித்த நகைகளை அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சை கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

* தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தில் ஆயிரத்தெண் விநாயகர் கோயில் கொண்டுள்ளார். சித்திரை மாதம் பிரம்மோத்ஸவத்தின் ஏழாம் நாளன்று பஞ்சமுக ஹேரம்ப கணபதி நடராஜருடன் வீதியுலா வருவார்.

* தென்னாங்கூர் பாண்டுரங்கன் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று குருவாயூரப்பன் கோலத்தில் தரிசனம் தருகிறார்.

* திருச்செங்காட்டாங்குடியில் சித்திரை பரணி நட்சத்திர நாளன்று பிள்ளைக்கறியமுது நிகழ்ச்சி நடைபெறும். அரிசி மாவு, வெல்லம், தேங்காய் துருவல், ஏலக்காய், திப்பிலி, வால் மிளகு சேர்த்து சீராளன் (சிறுத்தொண்டரின் மகன்) பொம்மை செய்து, பிள்ளைக்கறியமுது நைவேத்தியம் செய்யப்படும்.

* திருச்சி, தாயுமான சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா ஐந்தாம் நாளன்று செட்டிப் பெண் மருத்துவ நிகழ்ச்சி நடைபெறும். இன்று சுகப்பிரசவம் நிகழ சுக்கு. வெல்லம் கலந்த மருத்துவப் பொடி பிரசாதமாக வழங்கப்படும்.

* திருவக்கரை மகாகாளி தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று ஜோதி ஏற்றி வழிபட்டால் வக்ர தோஷங்கள் அகலும்.

* கோயில்களில் பிரம்மா நடத்தும் திருவிழாக்களுக்கு, ‘பிரம்மோத்ஸவம்’ என்று பெயர். மதுரையில் தேவேந்திரன் சித்ரா பௌர்ணமி விழாவை நடத்தியதால் அது, ‘இந்திர விழா’ என பெயர் பெற்றது. சிவபெருமானின் சொற்படிதான் இந்திரன்
சித்ரா பௌர்ணமி விழாவை நடத்தியதாகக் கூறுகிறது திருவிளையாடல் புராணம்.

* சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலை கோயில் கிழக்கு கோபுரத்தின் முன் நின்று பசு நெய் விட்டு, தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்றி உயர்த்திப் பிடித்தபடி அண்ணாமலையை தரிசித்து கிரிவலம் தொடங்குவது புண்ணியம்.

* ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் வலம் வரும் சித்திரை தேர் திருவிழாவை, ‘விருப்பன் திருநாள்’ என்பார்கள். ரங்கநாதர் கோயிலில் இருந்த பெருமாள் வேற்று மதத்தவர் படையெடுப்பின்போது மறைத்து வைக்கப்பட்டார். அதனால் அறுபது ஆண்டுகள் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. அதன் பிறகு விருப்பன்ன உடையார் என்ற நாயக்க வம்ச மன்னர் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். அதனால் இத்திருவிழாவை அவரது பெயரைக் கொண்டே, ‘விருப்பன்னத் திருநாள்’ என்று அழைக்கின்றனர்.

* நாமக்கல் கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று சித்தர்கள் நீராடிய பொய்கை, கோயில் தீர்த்தமான சரபேஸ்வரர் தீர்த்தத்தில் கலப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

* திருக்குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையோடு கூடிய மழை பெய்யும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

* சித்ரா பௌர்ணமியன்று காஞ்சி வரதராஜரை பிரம்மா பூஜிப்பதாக ஐதீகம். அவர் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் பிரசாதம் நறுமணம் வீசுமாம்.

* காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்கார்குளம் என்ற ஊரில் உள்ள சஞ்சீவராயர் கோயில் அருகே நடவாவிக் கிணறு உள்ளது. இந்தக் கிணறு மண்டபம் போன்ற
உள் கட்டமைப்பு கொண்டது. கீழே போக படிக்கட்டுகள் உள்ளன. சித்ரா பௌர்ணமியன்று இந்தக் கிணற்று நீரை வெளியேற்றி விடுவார்கள். அன்று மாலை கீழேயுள்ள மண்டபத்தில் வரதராஜர் எழுந்தருள்வார். மறுநாள் மாலையில் ராமர், சீதை, லட்சுமணர் எழுந்தருள்வார்கள்.

* கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் உள்ள சித்திரபுத்திர எமதர்மராஜா கோயிலில் எமன் எருமை வாகனத்தில் அமர்ந்திருக்க, சித்திர குப்தர் எழுத்தாணி, ஓலைச்சுவடியுடன் அருகில் நிற்கிறார். இக்கோயிலில் சித்ரா பௌர்ணமியன்று பொங்கல் வைத்து 101 வகை படையல்கள் படைக்கப்படுகின்றன.

* காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனிக்கோயில் உள்ளது. சித்ரா பௌர்ணமியன்று காலையில் அஷ்ட ஐஸ்வர்ய பூஜையும், மாலையில் கல்யாண உத்ஸவமும் நடைபெறும். பிறகு அவர் வீதியுலா வருவார். இன்று சித்திரகுப்தரை வணங்கினால் மரண பயம் நீங்கும், பாவம் செய்யும் எண்ணங்கள் அகலும், உடல் ஆரோக்கியம் மேம்படும்.

* தேனி மாவட்டம், கோடாங்கிப்பட்டி அருகில் தீர்த்தத்தொட்டி என்ற இடத்தில் சித்திரபுத்திர நாயனார் கோயில் உள்ளது. கேது பகவானுக்கு சித்திரகுப்தர் அதிபதி என்பதால் கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. சித்ரா பௌர்ணமியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தால் பாவங்கள் அகல சித்திரகுப்தர் அருள்வார் என்பது ஐதீகம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!

1
- ஜி.குமார் விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை. கும்பகர்ணன் வீழ்ந்தாலும் இந்திரனையும் வென்ற தன் மைந்தன் மேக்நாத்தின் பராக்கிரமத்தை...

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

0
கணிப்பு : கி.சுப்பிரமணியன் (8610023308) பொதுப்பலன்கள் தமிழ் புத்தாண்டு சுபகிருது வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 2022 அன்று சுக்ரனுடைய பூர நட்சத்திரத்தில் தொடங்குகிறது. சுபகிருது என்று சொன்னால் எல்லோருக்கும் நல்ல சுபத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆண்டு...

பரிகாரங்கள் பத்து!

0
- அபர்ணா சுப்ரமணியம் புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்! திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த...

படித்தேன்; ரசித்தேன்!

0
வலிமை பெற்ற மனம்! எண்ணங்களின் குவியலே மனம். எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமை ஆனது. மனம் அலைபாயும்போது சக்தியானது எண்ணத்தினால் சிதறிப்போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போதுதான் சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை...