0,00 INR

No products in the cart.

எட்டாம் எண் வெற்றியைத் தருமா?

கேள்வி நேரம்

– ஞானகுரு

கல்வி பயிலும் குழந்தைகள் சரஸ்வதி அந்தாதியை எப்போது படிப்பது நலம் தரும்?

– என்.கோமலவல்லி, செந்துறை

முதலில் குழந்தைகளை நன்றாகப் படிக்க வைத்து உயர்ந்த அந்தஸ்தில் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்குச் சற்று ஓய்வு கொடுங்கள்.
சரஸ்வதி அந்தாதியைப் படிக்கத் துவங்குவதற்கு முன் விநாயகர் சன்னிதியிலோ,
குரு பகவான் சன்னிதியிலோ ஒரு ஆச்சார்யர் உதவியுடன் மந்திரங்களை அட்சர பேதமின்றி உபதேசமாகப் பெற வேண்டும். காலை குளித்து முடித்து ஆறு மணி முதல் ஏழு மணிக்குள்ளும், மாலை ஆறு மணிக்கு மேல் ஏழரை மணிக்குள்ளும் சரஸ்வதி அந்தாதியைப் படிக்கப் பழக வேண்டும். கவிச்சக்கரவர்த்தி கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி, படிக்கும் பிள்ளைகளுக்கு நல்ல அறிவைத் தருவதாகும்.

‘ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை – தூய
உருப் பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பாள் இங்கு வாரா திடர்.

படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் – துடியிடையும்
அல்லும் பகலும் அனவரதமும் துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே.’

எனும் துதிகளை தினமும் கூறி வழிபட்டு வந்தால் கலைவாணி சரஸ்வதி தேவி ஆயக்கலைகள் அனைத்தையும் அருள்வாள்.

தேவாரத் திருப்பதிகங்களைப் பாடிய அடியார்கள் மற்ற தெய்வங்களைப் பற்றி தங்கள் பாடல்களில் சொல்லாதது ஏன்?

– பே.சிவசண்முகம், கடலூர்

நால்வர் பெருமக்கள் சைவ சமயத்தின் உயர்வை எடுத்துரைக்க தேவாரப் பதிகங்களைப் பாடியபோது, ஈசனை மட்டுமே நினைவில் வைத்தனர்.
அவர்கள் திருமாலும், முருகனும், சக்தியும், கணபதியும் சிவனுக்குள் அடங்கி இருப்பதாகவே நினனத்தனர். ‘நன்மையும் தீமையும் நாளும் நல்குமே ஸ்ரீராம என்ற இரண்டெழுத்தினால்’ என்று பாடிய ஆழ்வாராதிகள் ஸ்ரீமன் நாராயணனையே மனதில் உறுதிபடக் கூறினர். வைணவ சம்பிரதாய முத்திரை போட்டு கொண்டு திவ்யப் பிரபந்தம் சாற்றுமுறை செய்வது விஷ்ணு அடியார்களது பணி என இறைவனின் அருட்கட்டளை. அதேபோல சிவனடியார்கள் தங்கள் பாடலில் கண்ணால் காண்பது அனைத்தும் சிவமாக எண்ணிப் பாடுவதையே பிறவிக் கடனாகச் செய்து வந்தனர். இது இவர்களுக்கு இட்ட சிவ கட்டளையே.

திருத்தல யாத்திரைக்குச் செல்லும்போது தடைகள் ஏற்பட்டுவிட்டால் பயணத்தைத் தொடர்வதா? வேண்டாமா?

– எம்.அமுதா, திருவள்ளூர்

திருத்தல யாத்திரை தடைபட்டால் அதற்கு மட்டைத் தேங்காய், தாம்பூலம், பழம் தட்சணை வைத்து, ‘இரண்ய தானம்’ செய்துவிட்டு பயணத்தைத் தொடர்வது சாஸ்திர விதி.

அதிக்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம|
பைரவாய நமஸ்துப்யம் அநுக்ஞாம் தாது மர்ஹஸி||
கங்கே கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் சதைரபி|
ஸயாதி ப்ரும்மண: ஸ்தாநம் ப்ரும்மணா ஸஹ பூஜ்யதே||
துர்போஜன துரா லாப துஷ் ப்ரதிக்ரஹ ஸம்பவம்|
பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஜந்ஹுகன்யே நமோஸ்துதே||

என்ற மந்திரத்தை மூன்று முறை சொல்லிவிட்டு யாத்திரை புறப்பட வேண்டும். திருத்தல யாத்திரைக்குச் செல்வதற்கு முன் கால பைரவரை வணங்கி, பயணத்தை ஆரம்பிப்பது நன்மை பயக்கும்.

எட்டு எண்ணிக்கையில் வரும்படி வைக்கப்படும் பெயர்கள் ஒருவருக்கு வெற்றியைத் தராது என்று கூறுவது சரியா?

– கே.தாமோதரன், சிவகாசி

பலருக்கும் இந்தச் சந்தேகம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சனி பகவானுக்கு உரிய எண் எட்டு என்பதால் அதை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்துவிட்டு அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை இழந்துவிட்டுத் தவித்துக் கொண்டிருக்கி்ன்றனர். கிரேக்க தத்துவ ஞானி ஒருவரிடம் சென்ற அவரது சீடர், ‘எனக்கு மட்டும் எட்டாம் எண்ணைக் கொடுத்து விட்டீர்களே! என் மேல் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு?’ என்றான். அதற்கு அவர், ‘பாடங்களை நன்றாகப் படித்து தேர்வு எழுதிவிட்டு வந்து என்னைப் பார்’ என்றார். தேர்வு முடிந்து வந்தவன் ஞானியைப் பார்க்க, ‘நூறு கேள்விகளில் எட்டு, பதினேழு, இருபத்தாறு இப்படி எட்டில் முடியும் கேள்விகளுக்கு விடை தராமல்தானே வந்தாய்?’ என்று கேட்டார். ‘அய்யய்யோ, ஞானியாரே! அவற்றை விலக்கிவிட்டு தேர்வு எழுதினால் தோற்றுப் போய்விடுவேனே!’ என்றான். ‘உன்னால் எட்டு தொடர்பான விஷயங்களை விலக்கினால் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியாதோ அதைபோல எட்டு இல்லாமல் வாழ்வில் எதையும் சாதிக்க முடியாது’ என்று கூறினார். எட்டாம் எண்ணை வேண்டாம் என்று விலக்கச் சொல்வோரிடமிருந்து விலகி விடுங்கள். வாழ்க்கையில் எட்டாக்கனி கூட எளிதில் கிடைக்கும்.
அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும். பெயர் எட்டில் வைத்தால் சனி பகவானின் அருளும், குடும்பத்தில் எல்லா நன்மைகளும் கிடைத்து மகிழ்ச்சியோடு வாழலாம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...

வெற்றிக்கு வித்திட்ட பணிவு!

1
- ஜி.குமார் விடிந்தால் இன்றும் யுத்தம். ராவணனின் புதல்வன் மேக்நாத்தை லக்குவணன் நேருக்குநேர் இன்று சந்திக்க வேண்டும். இதுவரை மேக்நாத் யாராலும் தோற்கடிக்கப்படவில்லை. கும்பகர்ணன் வீழ்ந்தாலும் இந்திரனையும் வென்ற தன் மைந்தன் மேக்நாத்தின் பராக்கிரமத்தை...

சுபகிருது தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள்

0
கணிப்பு : கி.சுப்பிரமணியன் (8610023308) பொதுப்பலன்கள் தமிழ் புத்தாண்டு சுபகிருது வருஷம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி 2022 அன்று சுக்ரனுடைய பூர நட்சத்திரத்தில் தொடங்குகிறது. சுபகிருது என்று சொன்னால் எல்லோருக்கும் நல்ல சுபத்துவத்தைக் கொடுக்கக்கூடிய ஆண்டு...

பரிகாரங்கள் பத்து!

0
- அபர்ணா சுப்ரமணியம் புற்றுநோயை குணமாக்கும் தல விருட்சம்! திருப்பராய்த்துறை மூலவர் பராய்த்துறைநாதர் அமர்ந்துள்ள கருவறைக்குப் பின்புறம் பராய் மரம் உள்ளது. புற்று நோய் மற்றும் எளிதில் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமைதோறும் இந்த...

படித்தேன்; ரசித்தேன்!

0
வலிமை பெற்ற மனம்! எண்ணங்களின் குவியலே மனம். எண்ணங்களிலிருந்து விடுதலைப்பட்ட மனமே வலிமை ஆனது. மனம் அலைபாயும்போது சக்தியானது எண்ணத்தினால் சிதறிப்போய் பலவீனமடைகிறது. மனம் ஒரே எண்ணத்தோடு இருக்கும்போதுதான் சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை...