0,00 INR

No products in the cart.

பஞ்சம் போக்கும் பஞ்சமி விரதம்!

– எம்.கோதண்டபாணி

மிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை திங்கள் பல்வேறு சிறப்புமிகு தினங்களைக் கொண்டிருந்தாலும், திருமகளாம் மகாலக்ஷ்மிக்கு மிக உகந்த நாளாக பக்தர்களால் அனுசரிக்கப்படுவது இம்மாதத்தில் வரும் லக்ஷ்மி பஞ்சமி விரத தினமாகும். நவராத்திரி, தீபாவளி மற்றும் பிரதி வெள்ளிக்கிழமைகள் மகாலக்ஷ்மியை பூஜிக்க சிறப்பு நாட்கள் என்றாலும் சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் பஞ்சமி திதி மகாலக்ஷ்மி தேவியை வழிபட மிக உகந்த விரத நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக, சில விரதங்கள் நட்சத்திரத்தின் அடிப்படையிலும், இன்னும் சில விரதங்கள் திதியின் அடிப்படையிலும் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் லக்ஷ்மி பஞ்சமி விரதம் திதியின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகின்ற ஓர் வழிபாட்டு தினமாகும்.

ரு சமயம் மகாலக்ஷ்மி தாயார் தேவர்கள் மீது கோபம் கொண்டு இந்திர லோகத்தை விட்டு அகன்றாள். இதனால் கடும் இன்னல்களுக்கு ஆளான இந்திரன்,
அன்னை மகாலக்ஷ்மியை குறித்து கடும் தவம் மேற்கொண்டான்.
அதோடு தேவர்களும் அவனோடு சேர்ந்து விரதம் பூண்டனர். தேவர்களின் பக்தியில் உளம் மகிழ்ந்த மகாலக்ஷ்மி தாயார் மீண்டும் அவர்களுக்கு அனுக்கிரகம் செய்ய இந்திர லோகத்தில் வாசம் செய்யத் தொடங்கினாள். அந்த நாள் சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதி என்று புராண வரலாறு கூறுகிறது.

ஒருவர் எப்போதும் குழப்பமான மனநிலையிலேயே இருப்பது, செய்யும் காரியங்கள் அனைத்திலும் தடை ஏற்படுவது, வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற்று நீண்ட நாட்கள் ஆவது, குடும்பத்தில் எப்போதும் சண்டை சச்சரவுகள் நிலவுவது, நீண்ட நாட்களாக கடன் தொல்லை, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்றி வாழ்வது போன்றவை ஒரு வீட்டில் திருமகள் வாசம் செய்யாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணங்களாக பெரியோர்கள் கூறுகின்றனர்.

மேற்கண்ட பிரச்னைகளினால் அவதியுறுவோருக்கு கைகண்ட நிவாரணமாக விளங்குவது லக்ஷ்மி பஞ்சமி விரதமாகும். இந்த விரதத்தை வீட்டில் உள்ள அனைவரும் மேற்கொள்ளலாம். இனி, இந்த விரத பூஜையை எப்படிக் கடைபிடிப்பது என்பது குறித்துக் காண்போம்.

க்ஷ்மி பஞ்சமி தினத்தன்று (6.4.2022) அதிகாலை நீராடி, வீட்டை தூய்மை செய்து பூஜை அறையில் ஒரு பலகை போட்டு அதில் கோலமிட வேண்டும். பிறகு அதன் மீது கலசம் ஒன்றை தயார் செய்து, அதற்கு வஸ்திரம், மாலை, ஆபரணங்கள் போன்றவற்றை அணிவிக்க வேண்டும். நன்கு சுண்டக் காய்ச்சிய பசும் பால், இனிப்புப் பொங்கல், பாயசம் போன்றவற்றை தாயாருக்கு நிவேதனமாகப் படைக்கலாம். பிறகு,

‘ஓம் ஸ்ரீ மகாதேவ்யை ச வித்மஹே
விஷ்ணு பந்தாய ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்’

எனும் மகாலக்ஷ்மி காயத்ரி மந்திரத்தைச் சரியாக உச்சரித்து, அதில் திருமகளை ஆவாஹனம் செய்ய வேண்டும். பிறகு, ‘மகாலக்ஷ்மி தாயே… இந்த எளிய பூஜையை ஏற்றுக்கொண்டு எங்களுக்கு அருள்புரிய வேண்டும்’ என்று மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதன் பிறகு வாசமுள்ள பூக்களைக் கொண்டு. ‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நமஹ’ எனும் லக்ஷ்மி குபேர மந்திரத்தை 108 எட்டு முறை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அன்று முழுவதும் ஏதும் உண்ணாமல் விரதமிருப்பது நல்ல பலன்களைப் பெற்றுத் தரும். விரதத்தின்போது, ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம், கனகதாரா ஸ்தோத்ரம், லக்ஷ்மி ஸஹஸ்ரநாம பாராயணம், லட்சுமி அஷ்டோத்திர மந்திரங்கள் போன்றவற்றை ஜபிக்கலாம்.

ன்று மாலை உங்களால் முடிந்த நிவேதனம் ஏதாவது ஒன்றை செய்து மகாலக்ஷ்மி தாயாரை வழிபட்டு, தீபாராதனை காட்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இயன்றவர்கள் இன்று திருமகளுக்குரிய ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேத பண்டிதர்களைக் கொண்டு விசேஷமாகச் செய்யலாம். இன்று வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நல்ல ஆடை, ஆபரணங்கள் அணிவித்து அவர்களை மகாலக்ஷ்மியாகவே பாவித்து இந்த பூஜையை செய்வது சிறப்பு.

இந்த விரதத்தை உண்மையான பக்தியுடன் கடைபிடிப்பதன் மூலம் ஒருவருக்கு மகாலக்ஷ்மியின் கருணை கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும். அதாவது, வறுமை ஒழியும். நீண்ட நாட்களாக வருத்தி வந்த கடன் தொல்லைகள் அகலும். தொழில் வளம் பெருகி பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் உண்டாகும். நீண்ட நாட்கள் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடந்தேறும். வீடு, வாகன, பொருட்சேர்க்கை உண்டாகும். பட்டம், பதவி தேடி வரும்.

காலக்ஷ்மியின் பூரண அருளைப் பெற்றுத் தருவது சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்ரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே, வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலக்ஷ்மி தாயாரை பூஜிப்பது, தரிசனம் செய்வது அனைத்து நலன்களும் கைகூடச் செய்யும். மேலும், வளர்பிறை பஞ்சமி, வெள்ளிக்கிழமைகளில் வரும் அஷ்டமியும் மகாலக்ஷ்மி தாயார் வழிபாட்டுக்கு சிறந்த காலமாகும்.

அதேபோல், ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை வேளையும் குபேர காலம் எனப்படுகிறது. அதிலும் பௌர்ணமி நாளில் வரும் வியாழக்கிழமை மாலை வேளை மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொடர்ந்து ஐந்து வியாழக்கிழமைகளில், மகாலட்சுமி மந்திரத்தைச் சொல்லி, குபேர தீபம் ஏற்றி வழிபட்டால், பொருளாதாரச் சிக்கல்கள் தீரும்.

பொதுவாக, விரதம் இருப்பது உடல் நலனையும் மன நலனையும் மேம்படுத்தும் ஒரு செயலாகும். அதிலும் செல்வத்துக்கு அதிதேவதையான மகாலக்ஷ்மி தாயாரைக் குறித்து விரதமிருந்து வழிபடுவது அனைத்து நலன்களையும் பெற்றுத் தருமல்லவா?! பஞ்சமி விரதமிருப்போம் பஞ்சமில்லா வாழ்வைப் பெறுவோம்!

1 COMMENT

  1. மிக அருமையான தகவல்கள்.மிக துல்லியமான அம்மன் படம் ஆஹா.மகிழ்ச்சி

எம்.கோதண்டபாணி
கோதண்டபாணி 32 ஆண்டு கால பத்திரிகை பணி. கல்கி குழுமத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக தீபம் இதழின் உதவி ஆசிரியர் பணி. ஆன்மீகக் கட்டுரைகள் எழுதுவது... இந்து சமய பெருமையை எழுதுவது பிடித்தம். Ponniyin Selvan நாவலில் வந்த கோயில்களை தொகுத்து PONNIYIN PAATHAIYIL எனும் தொடர் வெளியாகி தனி புத்தகமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

அக்னி தேவனுக்கு உதவிய அர்ச்சுனன்!

- ரேவதி பாலு நமது நான்கு வேதங்களான ரிக், சாம, யஜுர், அதர்வண வேதங்களுள் ரிக் வேதமே மிகத் தொன்மையானது. இந்த வேதத்தில் இருநூறு ஸ்லோகங்கள் அக்னி பகவான் குறித்தே சொல்லப்பட்டிருக்கின்றன. அக்னி என்றால் நெருப்பு....

பலன் தரும் ஸ்லோகம்

0
எதிர்மறை சக்திகள் அகல... ‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னை வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள் விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.’ - திருமுறை எனும் ஸ்லோகத்தை காலை, மாலை தீபம் ஏற்றும்போது மூன்று அல்லது ஒன்பது...

பள்ளியறை பூஜை பலன்கள்!

0
- எம்.ஏ.நிவேதா சிவாலயங்களில் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை, பள்ளியறை பூஜை ஆகும். அதாவது, சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறை ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப்...

பௌர்ணமியில் அம்பிகை பூஜை!

2
- பொ.பாலாஜிகணேஷ் முழு நிலவு காணும் பௌர்ணமி தினங்களில் அம்பிகையை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீ சக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு நித்யைகளாக மகா...