0,00 INR

No products in the cart.

அட்சய திருதியை செய்திகள்

– ஆர்.ராஜலட்சுமி

* ஈசனை வேண்டி வரம் பெற்று, நவநிதிகளுக்கும் குபேரன் அதிபதியானது அட்சய திருதியை நாளன்றுதான்.

* தான்ய லட்சுமியும் தனலட்சுமியும் தோன்றிய திருநாட்கள் அட்சய திருதியை தினம்தான்.

* வானவாசத்தின்போது, பாண்டவர்களுக்கு சூரியன் அட்சய பாத்திரத்தை வழங்கிய நாள் அட்சய திருதியை தினமாகும். அதை தருமர் திரௌபதியிடம் அளித்தார்.

* காசியில் அன்னபூரணி தேவி, ஈசனுக்கு அன்னம் அளித்த நாள் அட்சய திருதியையாகும்.

* ஈசன் கையில் ஒட்டிய பிரம்ம கபாலத்தை நிரப்ப மகாலட்சுமி அன்னம் பாலித்த நாள் அட்சய திருதியை நன்னாள் ஆகும்.

* அருந்ததி, வசிஷ்டருடன் சப்தரிஷி மண்டலத்தில் இடம் பெற்றது அட்சய திருதியையன்று விரதமிருந்து தானங்கள் செய்த மகிமையால்தான்.

* சென்னை அருகேயுள்ள ரத்தினமங்கலம் லட்சுமி குபேரர் கோயிலில் அட்சய திருதியையன்று சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடுகள் நடைபெறுகின்றன.

* காய்கறி, கனிகள், மூலிகைகளோடு சாகம்பரி தேவியாக பராசக்தி ஆவிர்பவித்த நன்னாள் அட்சய திருதியை ஆகும்.

* கும்பகோணத்தில் நடைபெறும் 16 கருட சேவை, அட்சய திருதியையன்று நடைபெறுவது சிறப்பாகும்.

* திருவானைக்காவல் கிழக்கு கோபுரத்தில் உள்ள குபேரலிங்கம் அட்சய திருதியையன்று சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

* சீர்காழியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் அட்சய திருதியையன்று
உதய கருட சேவையின்போது, ஸ்ரீனிவாசரையும் ஸ்ரீராமரையும் ஒன்றாக தரிசிக்கலாம்.

* கும்பகோணம், பட்டீஸ்வரம் அருகேயுள்ள முழையூர் பரசுநாதர் கோயிலில் அட்சய திருதியையன்று சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

* தஞ்சாவூர் விளாங்குளத்தில் உள்ள அட்சயபுரீஸ்வரரையும் அபிவிருத்தி நாயகியையும் அட்சய திருதியையன்று தரிசித்தால் அனைத்து வளங்களும் புண்ணியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

0
- டி.ஜெயலட்சுமி பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு! சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு...

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...