0,00 INR

No products in the cart.

பிரார்த்தனை பரிகாரத் தலங்கள்!

– டி.ஜெயலட்சுமி

பூர்வஜென்ம தோஷ நிவர்த்தி வழிபாடு!

சென்னை, தங்கசாலையையும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சாலையையும் இணைக்கும் இடத்தில் உள்ளது சின்னக்கடை மாரியம்மன் என்ற ரேணுகா தேவி ஆலயம். இந்தக் கோயில் சுமார் 250 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இக்கோயில் கருவறையில் சீதளா தேவியாக முழு உருவிலும், ரேணுகா தேவியாக சிரசை மட்டும் பூமிக்கு மேல் வைத்து அம்மன் காட்சி தருகின்றாள். இந்த அம்மனை எலுமிச்சை பழங்களுடன் மிளகாயைச் சேர்த்துக் கட்டிய மாலையை சாத்தி,
தேவி வரை பூஜிக்க, பூர்வஜென்ம வினை, தோஷங்கள் மற்றும் தீய ஆவிகளின் தொந்தரவுகள் அனைத்தும் ஒழியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

மழலைப் பேறு தரும் பெளர்ணமி பூஜை!

சென்னையை அடுத்த மாமல்லபுரம் எல்லைப் பகுதியில் பிடாரி கருக்காத்தம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மாமல்லபுரம் நகரின் கிழக்கே ஸ்தல சயனப் பெருமாள் அருள்பாலிக்கிறார். மேற்கே காவல் தெய்வமாக இந்த கருக்காத்தம்மன் வீற்றிருக்கிறாள். கருவைக் காத்த அம்மன் என்பதால் இந்த அம்மனை கருக்காத்த அம்மன் என்று அழைக்கின்றனர். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் மூன்று பெளர்ணமி தினங்களில் இந்த அம்மனை வலம் வந்து வழிபட்டு, ஒரு சிறிய துணியில் எலுமிச்சம் பழம் அல்லது சிறிய கல் ஒன்றை வைத்து தொட்டில் அமைத்து, தல விருட்சமான எட்டி மரத்தில் கட்டுகின்றனர். கருக்காத்தம்மன் திருவருளால் வேண்டுதல் பலித்து, குழந்தை பாக்கியம் பெற்ற பெண்கள், தாயும் சேயுமாக கோயிலுக்கு வந்து தங்கள் நன்றியை காணிக்கையால் தெரிவிக்கின்றனர். இந்த அம்மன் ஆறு மாதம் ஆக்ரோஷ முகத்துடனும், ஆறு மாதம் சாந்தமான முகத்துடனும் காட்சி தருவது சிறப்பு அம்சமாகும்.

கண் பார்வையைச் சிறக்கச் செய்யும் வெள்ளீஸ்வரர்!

‘மயிலையே கயிலை, கயிலையே மயிலை’ என்னும் பெருமைக்குரிய தலமாகத் திருமயிலை திகழ்கிறது. இங்குள்ள வெள்ளீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி பெருவிழாவின் எட்டாம் நாள் சுக்ரன் கண்ணொளி பெறும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. வெள்ளி என்ற சுக்ரன், ஈசனை வழிபட்டதால் வெள்ளீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அன்று காலை 11 மணியளவில் சுக்ராச்சார்யார், மகாபலிச் சக்ரவர்த்தி, வாமனர் ஆகிய மூன்று உத்ஸவ மூர்த்திகளை, மயிலை சித்திரக்குளம் அருகே எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்விக்கின்றனர். பின்னர் உத்ஸவ மூர்த்திகளான உலகளந்த பெருமாள், பிரம்மா, பிரதோஷ நாயகர் எழுந்தருள, பிரதோஷ காலமான 4.30 – 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்று கண்ணொளி வழங்கப்படும். அப்போது ஓதுவார்கள் பதிகம் பாடுவார்கள். சுந்தர மூர்த்தி நாயனார் இழந்த தம் பார்வையைப் பெற வேண்டி பாடிய இரு பாடல்கள் இக்கோயில் சுவரில் பதிக்கப்பெற்றுள்ளன. செய்த தவறை உணர்கின்றவர்களுக்குத் தயவுகாட்ட இறைவன் தயாராக உள்ளான் என்பதனால்தான் ‘காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே’ என்று மாணிக்கவாசகரும் ‘காணார்க்கும், கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே” என்று வள்ளலாரும் மனம் கசிந்து பாடினார்கள்.

கிரஹ தோஷ நிவர்த்தி தரும் நெய் பிரார்த்தனை!

சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி ஆதியப்பா தெருவும் கோடவுன் தெருவும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள வாசவி தேவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அம்பிகை இரண்டு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அம்மனைச் சற்று உற்று நோக்கினால் மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மனே கண் முன் நிற்பது போல் தத்ரூபமாக இருக்கிறது. கருவறையின் உள்ளே இடதுபுறம் உத்ஸவ வாசவி அம்மன் அருள்பாலிக்கிறாள். கருவறையின் வெளியே வலதுபுறம் சற்று ஓரமாக அரச மரத்தின் கீழ் விநாயகர் சிலையும், நாகப்புற்றும் உள்ளன. அங்கு நாகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகப்புற்றுக்கு பால் வார்த்து, ஒன்பது நெய் தீபம் ஏற்றி மூன்று வாரங்கள் தொடர்ந்து வணங்கிவந்தால் சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் போன்றவை அகலும். வாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில், நவக்கிரஹ சன்னிதி உள்ளது. இத்தல அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து ஒன்பது வாரம் நெய் சேர்த்து வந்தால் சகல கிரஹ தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம்.

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வாழவைக்கும் வைத்திய நரசிம்மர்!

0
- ராமசுப்பு ‘ஸ்ரீ நரசிம்மர்’ என்ற சிங்கமுக அவதாரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. பிறப்பின்றி ஒரு நொடிப்பொழுதினிலே தனது பக்தன் பிரஹலாதனைக் காப்பாற்றவும், அதேசமயம் ‘பகவான் விஷ்ணு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று...

நலம் பெருக்கும் நவநாயகர்!

- கே.சூரியோதயன் சூரியன் காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்கிரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்ம ராசிக்கு அதிபதி. நவக்கிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு, அதிதேவதை - அக்னி, ப்ரத்யதி தேவதை - ருத்திரன்,...

வாழ்வைக் கடைத்தேற்றும் பஞ்ச நாமங்கள்!

- எ.எஸ்.கோவிந்தராஜன் ‘மனிதன் தம்மை நோக்கி ஓர் அடியாவது எடுத்து வைக்க மாட்டானா?’ என கடவுள் ஆவலோடு நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாராம். அப்படி நாம் கடவுளை நோக்கிச் செல்வதற்கான முதல் படி அவனது திருநாமங்களை உச்சரிப்பதுதான்....

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

1
- ஆர்.வி.பதி ‘வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்’ என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம்...

கேட்டேன்; ரசித்தேன்!

0
விபூதி தரிக்கும் விதம்! கோயிலில் விபூதியை வாங்கும்போது ஒன்றைக் கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலக்கையின் கீழே இடக்கையைச் சேர்த்து வைத்து விபூதியை வாங்க வேண்டும். விபூதியை இடக்கையில் கொட்டி, அதிலிருந்து மறுபடி...