0,00 INR

No products in the cart.

பார்வதி மைந்தனுக்கு பாவாடை நைவேத்யம்!

– எஸ்.ஸ்ருதி

சென்னை அருகே அமைந்த புகழ்மிக்க முருகப்பெருமான் திருத்தலம் திருப்போரூர். முருகன் அசுரர்களோடு மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் புரிந்து கன்மத்தை அழித்தார். போரூரில் விண்ணில் நின்று போர் புரிந்து ஆணவத்தை அடக்கினார். இங்கு முருகன் தாரகாசுரனுடன் போரிட்டதால் இத்தலம் போரூர், தாருகாபுரி, சமராபுரி என பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது. இங்கு முருகப்பெருமான், ‘கந்தசுவாமி’ எனும் பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

ஒரு காலத்தில் மண்ணில் புதைந்து கிடந்தது இந்தக் கோயில். அங்குள்ள ஒரு பனை மரத்தடியில் முருகன் சிலை ஒன்று இருந்தது. மதுரையைச் சேர்ந்த சிதம்பர சுவாமி என்பவரின் கனவில் தோன்றி, தான் இருக்கும் இடத்தைத் தெரிவித்தார் முருகப் பெருமான். அதன்படி சிதம்பர சுவாமி இங்கு வந்து சிலையைக் கண்டெடுத்து பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி, முருகன் மீது 726 பாடல்களைப் பாடினார். வைகாசி விசாகத்தன்று முருகனுக்கு மாலை நேர விருந்தாக பாவாடை நைவேத்யம் நடைபெறும். இத்தினத்திலேயே சிதம்பரம் சுவாமிகளின் குரு பூஜை நடைபெறும். அன்று முருகன் எதிரே சிதம்பர சுவாமியை எழுந்தருளச் செய்து, அவர் முருகப்பெருமானுடன் இரண்டறக் கலப்பது போல், கருவறையில் பெருமளவில் அன்னத்தைக் குவித்து வைத்து, சுவாமிக்கு தீபாராதனை நடத்தப்படும். இதுவே, ‘பாவாடை நைவேத்யம்’ எனப்படும்.

ந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் பூஜை நடத்த, முருகனின்
300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ள ஸ்ரீ சக்கர யந்திரம் ஒன்று கூர்ம (ஆமை) பீடத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகனுக்கு பூஜை முடிந்ததும்
ஸ்ரீ சக்கரத்திற்கும் பூஜை நடைபெறும். செவ்வாய் கிரகத்திற்கு அதிபதி முருகன் என்பதால், செவ்வாய் தோஷம் நீங்க பக்தர்கள் ஸ்ரீ சக்கரத்திற்கு திரிசதி அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

சிவபெருமானின் மடியில் அமர்ந்து முருகன் உபதேசம் செய்யும் சிலையும், கையில் வில்லேந்தி மயில் மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமி சிலையும் இங்குள்ளன. முருகன் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துகின்றனர். இத்தலத்தில் முருகன் சிலையைக் கண்டெடுத்தபோது, அது பனைமரத்தில் செய்த பாத்திரத்தால் மூடப்பட்டிருந்ததாம். தற்போதும் நைவேத்யத்திற்கான அரிசியை இந்தப் பாத்திரத்தில்தான் வைத்துள்ளனர். பிராகாரத்தில் வன்மீகநாதர், புண்ணியகாரணியம்மன் ஆகியோருக்கு சன்னிதி உள்ளது. பக்தர்களுக்குப் புண்ணியம் கிடைக்கக் காரணமாக இந்த அம்மன் விளங்குவதால் விசேஷ பூஜை நடைபெறுகிறது. சுமங்கலி பாக்கியம் வேண்டி அம்மனுக்கு அதிரசம் படைத்து பெண்கள் வழிபடுகின்றனர்.

அருகேயுள்ள குன்றில் கைலாசநாதர் பாலாம்பிகை கோயில் ஒன்று உள்ளது. இவ்வாறு மலையில் சிவனும், அடிவாரத்தில் முருகப்பெருமானும் அமர்ந்து அருளும் அற்புதத் திருத்தலமாக இது திகழ்கிறது.

அமைவிடம்: சென்னை – மாமல்லபுரம் சாலையில் 45 கி.மீ., செங்கல்பட்டிலிருந்து 25 கி.மீ.

தரிசன நேரம்: காலை 6 முதல் 12.30 மணி வரை. மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரை.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

கன்னியர் கோயில் ஆடி வெள்ளி திருவிழா!

0
- முத்து.இரத்தினம் புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பச்சைவாழி அம்மன் சமேத மண்ணாதீஸ்வரர் திருக்கோயில். பார்வதி தேவிக்கு உதவிய கன்னியர்களுக்கென்றே உருவான திருக்கோயில் இது என்று சொல்லப்படுகிறது. ‘கன்னியர் கோயில்’ என்றே அழைக்கப்படும் இத்திருக்கோயில்...

சயனக் கோலத்தில் ஸ்ரீ பத்ர மாருதி!

0
- லதானந்த் ஸ்ரீராம பக்த அனுமனை பொதுவாக நின்ற திருக்கோலத்திலோ, சஞ்சீவி மலையைத் தாங்கியபடியோ அல்லது சேவித்த கரங்களுடனோதான் தரிசித்திருப்போம். ஆனால், அனுமன் அபூர்வமாக உறங்குகின்ற திருக்கோலத்தில் மஹாராஷ்ட்ரா மாநிலம், ஔரங்காபாத் அருகே குல்தாபாத்...

அரச மரத்தடியில் அன்னை முப்பாத்தம்மன்!

- தனுஜா ஜெயராமன் தலைநகர் சென்னையில் அமைந்த மிகவும் பழைமை வாய்ந்த அம்மன் கோயில்களில் தியாகராயநகர் அருள்மிகு முப்பாத்தம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். வேண்டியவர்க்கு வேண்டியபடி அருளும் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன்...

மன அமைதி தரும் சிந்தபள்ளி சாயிபாபா!

0
- வி.ரத்தினா தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில்  அமைதியும் பசுமையும் நிறைந்த ரம்யமான சூழலில் காட்சி தரும் சிந்தபள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது ஷீர்டி பாபா ஆலயம். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழிலோடு அமைந்துள்ள பாபாவின்...

இன்னல் தீர்க்கும் இரண்டாம் காசி!

0
- எம்.அசோக்ராஜா விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், நடுசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அன்னபூரணி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில். இதை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்று...