அருளும் பொருளும் வழங்கும் ஸ்ரீ குபேர ஆஞ்சனேயர்!

அருளும் பொருளும் வழங்கும்
ஸ்ரீ குபேர ஆஞ்சனேயர்!

ஸ்ரீராம பக்தரான ஆஞ்சனேயரின் பிறப்பே அபூர்வமானது. அனுமனின் லீலைகளும் அவர் புரிந்த அற்புதங்களும் சொல்லில் அடங்காதவை. ராம நாமம் ஜபிப்பவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருந்து, அவர்களது துயரங்களைப் போக்குவதில் அனுமனை விடவும் சிறந்தவர் எவரும் கிடையாது. அப்பேர்ப்பட்ட அஞ்சனை மைந்தனான ஸ்ரீ ஆஞ்சனேயர் இந்த மண்ணுலகில் எண்ணற்ற திருத்தலங்களில் மாறுபட்ட கோலங்களில் எழுந்து, ஸ்ரீராம பக்தர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை நகரின் கிழக்கு - மேற்கு - வடக்கு - தெற்கு என நான்கு திசைகளிலும் கோயில் கொண்டெழுந்து அருள்பாலித்து வருகின்றார் ஸ்ரீ ஆஞ்சனேயர். அவற்றுள் நகரின் வட திசையில் அமைந்த ஸ்ரீ காமாட்சிபுரத்தில் எழுந்தருளும் அனுமன் மிகவும் பிரசித்தம் பெற்றவர். வடக்கு திசை அதிபதியான குபேர திசையில் இவர் கோயில் கொண்டிருப்பதால் பக்தர்களால் இவர், ‘ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயர்’ என்று அழைக்கப்படுகின்றார்.

தியில் அகத்திய மாமுனிவர் ஸ்தாபித்த சிவாலயம் இங்கு இருப்பது சிறப்பு. முன்னொரு காலத்தில் இந்தப் பகுதியில் வாழ்ந்த பலரும், பலவித நோய்களால் அவதியுற்றனர். அப்போது ஆற்காட்டை சுற்றி வாழ்ந்த மகான்கள் சிலரது சிந்தனைக்கு எட்டியது இந்தத் தகவல். அவர்களது ஆலோசனைப்படி வாலாஜாபேட்டையில் நான்கு திசைகளிலும் நான்கு ஆஞ்சனேயர் ஆலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் பலரது வியாதிகள் நிவர்த்தி அடைந்துள்ளது. இன்றும் இந்த நிகழ்வை பலரும் நினைவு கூறுவது அஞ்சனை மைந்தனின் அருட்கடாட்சத்துக்கு அடையாளம். சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த ஆஞ்சனேயர் பூமியில் இருந்து கிடைக்கப்பெற்றவர்.

இடது கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு, கதாயுதத்துடன் வலது கரத்தை மேல் நோக்கி வைத்தபடி, தனது திருமுக மண்டலத்தை ஆகாயம் பார்த்தவண்ணம் திருக்கோலம் கொண்டுள்ளார். இவருக்குக் கீழே ஸ்ரீராமர் பாதம் உள்ளது சிறப்பு. தலைக்கு மேல் சுழன்று நிற்கும் இவரது வாலின் நுனியில் மணி ஒன்று உள்ளது. இவ்வகை அமைப்பிலான அனுமன் சிலைகளை ஸ்ரீ மத்வாச்சாரியார் ஸ்தாபித்தது என்பர். இந்தக் கோலத்தை பிற தலங்களில் காண இயலாது. ஆலயத்தின் எதிரே விஜயநகர மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட திருக்குளம் அமைந்துள்ளது. அதோடு, இவ்வாலயத்தில் நாகராஜர் சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது விசேஷம்.

திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த ஆலயத்தில் பத்தினி மற்றும் வாகனத்துடனான நவகிரகங்கள், ‘நவகிரகக் கோட்டை’ என்னும் பெயரில் ஸ்தாபிக்கப்பட உள்ளது. அதோடு, ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்பாள் மற்றும்
ஸ்ரீ மஹாபெரியவா தியான மண்டபமும் நிறுவப்பட உள்ளது. ஸ்ரீ மஹாபெரியவா தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அனுமனை வணங்கும்படியும், ஸ்ரீராம நாமத்தை ஜபிக்கும்படியும், ஸ்ரீராம ஜயம் எழுதும்படியும் பலரிடமும் வலியுறுத்தியுள்ளார்.

செல்வம், ஆரோக்கியம் கடன் நிவர்த்தி, வியாபாரம், உத்தியோகம், திருமணம், பிள்ளை வரம், சனி தோஷ நிவர்த்தி போன்ற பல கோரிக்கைகள் நிறைவேற
ஸ்ரீ குபேர வீர ஆஞ்சனேயரை வணங்குவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com