ஆண்டாளும் மாணிக்கவாசகரும்!

ஆன்மிகம்
ஆண்டாளும் மாணிக்கவாசகரும்!

-ஸரோஜா ரங்கராஜன்

மார்கழியில் ஆண்டாள் பாவைநோன்பு நூற்கிறாள்.

மார்கழியில் மாணிக்கவாசகர் திருவெம்பாவை இயற்றினார்.

ஆண்டாள் நாராயணனே பரம்பொருள் என வைணவத்தை ஏற்றுகிறாள்.

மாணிக்கவாசகர் சிவனே பரம்பொருள் என்கிறார்.

இது அவரவர் நோக்கமும் மதப்பற்றும் ஆகும்.

ஆண்டாளைப் போலவே மாணிக்கவாசகரும் இசையில் மிக்கு இசை அர்ச்சனை செய்துள்ளார்.

திருப்பாவையில் ‘பாடி’ என்ற சொற்கள் 14 பாடல்களில் வருகிறது.

திருவெம்பாவையில் 16 பாடல்களில் பாடி என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

மார்கழி மாதம் திருவாதிரை ஏற்றம் என்றால் வைகுண்ட ஏகாதசி வைணவ மதத்திற்கு ஏற்றம் தருகிறது.

இருவருமே இறைவனை தமிழில் அர்ச்சனை செய்ய ஏதுவாக ‘போற்றி’ ‘போற்றி’ என்று புகழாரம் சூட்டி உள்ளனர்.

திருப்பாவை, திருவெம்பாவை இரண்டிலுமே ‘ஏலோ’ என்ற சொல் வருகிறது.

கிராமப்புறங்களில் ஆண் குழந்தை, பெண் குழந்தை இருவரையும் செல்லமாகக் கூப்பிடும் சொல் ‘ஏலே’, ‘ஏலே’ என்பதுதான். இதற்கு அர்த்தம் இல்லை. அசைச் சொல்தான். இதைத்தான் இருவருமே பயன்படுத்தி உள்ளனர்.

இருவருமே மார்கழி மாதத்தையே தேர்ந்தேடுத்துக் கொண்டுள்ளனர். இந்த ஒற்றுமையைப் பார்க்கும் போதுதான் ‘அரியும் சிவனும் (அவரவர்க்கு) ஒன்று’ எனப் புரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com