திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்டுகள் இணையதளங்களில் வெளியிடப்படும் தேதிகளை அறிவித்துள்ளது!

திருப்பதி தேவஸ்தான தரிசன டிக்கெட்டுகள்  இணையதளங்களில் வெளியிடப்படும் தேதிகளை அறிவித்துள்ளது!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை திருப்பதி தேவஸ்தானம் பின்பற்றி வருகிறது. இதற்கான டிக்கெட்டுகள் தற்போது இணையதளங்களில் வெளியிடப்படும் தேதிகளை அறிவித்துள்ளது திருப்பதி தேவஸ்தானம்.

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட், மெய்நிகர் சேவை டிக்கெட் உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகள் நாளை முதல் 25 தேதி வரையில் வெளியிட உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இணையதளங்களில் முன்பதிவு செய்து தரிசிக்கும் முறையை பின்பற்றி வருகிறது.

திருப்பதி கோயில்
திருப்பதி கோயில்

இந்நிலையில் இணையதளங்களில முன்பதிவு செய்வதற்கான தேதிகள் மற்றும் நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை சுப்ரபாதம், கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை போன்ற கட்டண சேவைகளில் பக்தர்கள் தினமும் தரிசித்து வருகின்றனர்.

டிக்கெட்டுகள் தேவையுள்ள பக்தர்கள் இணையதளங்களில் தேவஸ்தான கூறியுள்ள விதிமுறைகளை பின்பற்றி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த டிக்கெட்டுகள் குலுக்கல் முறையில் பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. மேலும் ஜூலை மாதத்திற்கான டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணி முதல் 22 தேதி காலை 10 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இவை 22 ம் தேதி மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் www. tirupathibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆகியவற்றை முன் பதிவு செய்ய பக்தர்கள் ஆதார் அட்டையை மட்டுமே இனிமேல் பயன்படுத்த முடியும் என்று தேவஸ்தானம் ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com