கங்கைக்குச் சமமான தீர்த்தங்கள்!

சிதம்பரம் சிவகங்கை தீர்த்தம்
சிதம்பரம் சிவகங்கை தீர்த்தம்

சிதம்பரம், அருள்மிகு நடராஜர் கோயில் சிவகங்கை தீர்த்தத்திலும், காஞ்சி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் ஆலய சிவகங்கை தீர்த்தத்திலும், தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் கைச்சின்னம் எனும் தலத்தில் உள்ள ஆகாய கங்கை தீர்த்தத்தில் நீராடினால் அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பர்.

நூபுரகங்கை
நூபுரகங்கை

ழகர்கோயில் திருமாலிருஞ்சோலை மலையில் உள்ள நூபுரகங்கை தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய பலனை அடையலாம்.

திருவாரூருக்கு அருகில் உள்ள முக்கடல் தீர்த்தம் எனும் திரிவேணி சங்கமத் தீர்த்தத்தில் நீராடினாலும் கங்கையில் நீராடிய புண்ணியச் சிறப்பைப் பெறலாம்.

ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்தகங்கை எனும் திருக்குளத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடினால் கங்கையில் நீராடிய பலனைப் பெறலாம்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் ஆலயத்துக்கு அருகில் ஓடும் காவிரி நதியிலும், மாயூரம் காவிரி நதியில் நந்தி கட்டம் எனும் இடத்திலும், ஐப்பசி (துலா) மாதத்திலும், கார்த்திகை மாத முதல் தேதியிலும் நீராடினால் கங்கையில் நீராடிய புண்ணியப் பலன் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com