மருத்துவச்சி அம்மன்!

மருத்துவச்சி அம்மன்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவெற்றியூர் தளத்தில் பழம் புற்றுநாதர், பாகம் பிரியாள் கோவில் உள்ளது. பெண்களின் பிரச்னைகளை தீர்க்கும் தளம் ஆகும். காலில் புற்று கண்டவர்கள் இங்கு வழங்கப்படும் தீர்த்தம், வேப்பிலை, விபூதி, பிரசாதம் இவற்றை உட்கொண்டால் நிவாரணம் கிடைப்பதாக நம்பிக்கை தீராத நோய்களை தீர்க்கும் அம்பாளுக்கு மருத்துவச்சி அம்மன் என்றும் பெயர் உண்டு.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வாகனங்களுக்கும் நைவேத்தியம் செய்யப்படுகிறது. யானை வாகனத்திற்கு கரும்புகளையும், குதிரை வாகனத்திற்கு அர்த்த ஜாமத்தில் பால் சேர்த்த சர்க்கரை பொங்கலும் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம் குச்சனூர் கோயிலில் சனீஸ்வரர் சுயம்புவாக லிங்க வடிவில் பெரிய உருவாகத் தோன்றியவர்.

ர்நாடக மாநிலம் நெக்காராவில் ஓம்காரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்திய முகலாய கலைகள் இணைந்த கோவில் இது. இங்குள்ள குலம் பொற்குலம் போல இருக்கும். 1813 இல் லிங்க ராஜா என்ற மன்னர் இக்கோவிலை கட்டியுள்ளார்.

ஞ்சாவூர் கோபுரத்தின் கீழ் சுவற்றில் தக்ஷிணாமூர்த்தி வெள்ளை தாடியுடன் மரத்தடியில் மான் தோல் மீது காலை வைத்து யோக நிலையில் ஆழ்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

காராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இருந்து 20 கிலோமீட்டர் மலைப்பாதையில் உள்ள இறைவனுக்கு கேதாரேஸ்வரர் என்று பெயர் பெரிய மீசை தலைப்பாகையுடன் இவர் காட்சி அளிக்கிறார். இக்கோவில் தரையில் சிந்தி இருக்கும் குங்குமத்தை பக்தர்கள் பக்தியுடன் உடலில் பூசி கொள்வது வழக்கம்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com