மூலவர் மூவர்
மூலவர் மூவர்

புரியாத புதிராக பூரி ஜெகந்நாதர் கோயில்!

டிசா மாநிலம், பூரி கடற்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஜெகந்நாதர், பலபத்திரர் மற்றும் சுபத்திரை ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு உண்டான அதிசயங்கள் பலவும் யாருக்கும் விளங்காதப் புதிராக உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய மடைப்பள்ளி இந்தக் கோயிலில்தான் உள்ளது. இங்கு சமைக்கும் பிரசாதம் எப்போதும் ஒரே அளவில்தான் இருக்கும். ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடினாலும், குறைந்தாலும் தயாராகும் பிரசாதம் ஒருபோதும் பற்றாமல் போனதில்லை. அதேபோல், மீதமும் ஆவதில்லை. இன்று வரை மடைப்பள்ளியில் விறகு அடுப்பில், மண் பானைகளை வைத்தே பிரசாதத்தை சமைக்கிறார்கள். இந்த மண் பானைகளை ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு அடுக்குகள் வைத்து கீழே தீ மூட்டுகிறார்கள். இதில் ஆச்சரியம் என்னவென்றால், கீழ் பானையில் உள்ள அரிசி கடைசியாகவும், மேல் பானையில் உள்ள அரிசி முதலாவதாகவும் வேகும்.

கோபுரத்தின் உச்சியில சுதர்சன சக்கரம்
கோபுரத்தின் உச்சியில சுதர்சன சக்கரம்

இந்தக் கோயில் கோபுரத்தின் உயரம் 214 அடி. கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள சுதர்சன சக்கரம், நகரின் எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அது உங்களை நோக்கிப் பார்ப்பது போலவே காட்சி தரும். அதேபோல், அந்த சக்கரத்தின் மேல் ஒரு கொடி பறந்து கொண்டிருக்கும். அடை மழை என்றாலும், கடும் குளிர் என்றாலும், கோடை வெயில் என்றாலும் மூன்று பேர் கொண்டு குழு எவ்வித சிரமமும் இன்றி கோபுரத்தின் உச்சிக்குச் சென்று தினமும் அந்தக் கொடியை ஏற்றுவர். ஆச்சரியத்தைத் தரும் அந்தக் கொடி காற்று எந்தப் பக்கம் வீசுகிறதோ அதற்கு எதிர் திசையில் பறக்கிறது. இது, விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத புதிராக உள்ளது.

எதிர் திசையில் பறக்கும் கொடி
எதிர் திசையில் பறக்கும் கொடி

அதேபோல், இக்கோயில் கோபுரத்தின் நிழல் பூமியின் மீது விழுவதில்லையாம். மேலும், இந்தக் கோயிலுக்கு மேல் விமானங்களோ, பறவைகளோ பறப்பதில்லை. சாதாரணமாக, கோயில் கோபுரங்களில் பறவைகள் கூடு கட்டி வாழ்வது உண்டு. ஆனால், இந்தக் கோயிலில் ஒரு பறவையைக் கூட காண முடிவதில்லை. இதுவும் இன்று வரை யாராலும் அறியப்பட முடியாத அமானுஷ்யமாக உள்ளது.

பூரி ஜெகந்நாதர் கோயில் கடற்கரையை ஒட்டி இருந்தாலும், கோயிலின் முதல் படியைத் தாண்டினால் கடல் அலைகளின் சத்தம் கொஞ்சமும் உள்ளே கேட்பதில்லை என்பது ஆச்சரியம். இந்த ஆச்சரிய அதிசயங்கள் யாவும் அந்த ஜெகந்நாதரைத் தவிர, மானுடர் யாருக்கும் விளங்காக புதிராகவே உள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com