தினபலன்
மேஷம் - 11-01-2023
இன்று அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை.
அசுபதி: தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும்.
பரணி: பார்ட்னர்களிடம் கவனமாக பேசி வியாபாரத்தை கொண்டு செல்வது நல்லது.
கிருத்திகை 1ம் பாதம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6