மேஷம் - 13-03-2023
இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
அசுபதி:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கணவன் மனைவிக் கிடையே இதமான உறவு காணப்படும். பிள்ளைகள் மூலம் நன்மை உண்டாகும் அவர்களது செயல்களால் பெருமை கிடைக்கும்
பரணி:இன்று எந்த ஒரு வேலையையும் விரைவாகவும் திறமையாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விழிப்புடன் செயல்படுவது நல்லது. எல்லா காரியங்களும் அனுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.
கிருத்திகை 1ம் பாதம்:இன்று சந்திரன் சஞ்சாரம் பல வகையிலும் நற்பலன்களை தரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சிதரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். ராசியாதிபதியின் சஞ்சாரத்தால் கவனமாக பேசுவது நல்லது. வீண்பழி உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9