தினபலன்
மகரம் - 01-05-2023
இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். தொண்டர்கள் உங்களுக்கு உற்சாகத்தை நல்குவர். எதிரிகளின் வலைப் பின்னலில் சிக்க மாட்டீர்கள்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும்.
திருஓணம்: பிள்ளைகளால் நன்மை கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9