தினபலன்
மகரம் - 08-05-2023
இன்று முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். பணிநிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குறிக்கோளற்ற வீண் பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதை தீர்த்து வைக்க முயல்வதை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: கடன் தொல்லை தலைதூக்கலாம்.
திருஓணம்: எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இடமாற்றம் அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5