மகரம் - 10-03-2023
இன்று கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். மாணவர்களுக்கு போட்டிகள் குறையும். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லது. குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள். அதனால் உங்கள் மரியாதை உயரும். பழைய கடன்களை அடைத்து வாக்கு நாணயத்தைக் காப்பாற்றி புதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம். தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
திருஓணம்:இன்று செவ்வாய் உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறைல் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7