மகரம் - 12-03-2023

மகரம் - 12-03-2023

இன்று தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும். வேலைப்பளு வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் சிற்றின்ப சுகத்தை தரும். பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுப்பறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். திருஓணம்:இன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். ஆனால் மனதில் குடும்ப கவலை உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சை கேட்டு நடப்பது திருப்தி தரும்

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com