மகரம் - 15-03-2023
இன்று சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். பல விதத்திலும் புகழ் கூடும். மற்றவர்கள் பிரச்சனைகளில் வாதாடி வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்:இன்று மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும். பிரச்சனைகள் தீரும். தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். திருஓணம்:இன்று வீண்செலவு குறையும். எதிலும் ஒரு வேகத்தை உண்டாகும். நல்லதா? கெட்டதா? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அவிட்டம் 1, 2 பாதங்கள்:இன்று தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்திசாதூர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6