தினபலன்
மிதுனம் - 01-02-2023
இன்று பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு சுமூக முடிவிற்கு வரும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: உங்களது ஆலோசனைபடி பிள்ளைகள் செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும்.
திருவாதிரை: கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9