தினபலன்
மிதுனம் - 03-05-2023
இன்று பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். அதில் பெரும் பாதிப்பு இருக்காது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: புதிய வேலை தேடுபவர்களுக்கு தாமதமானாலும் நல்லவேலை கிடைக்கும்.
திருவாதிரை: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9