மிதுனம் - 06-03-2023
இன்று புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின் ஆதரவு இருக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள். வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத நிலையை அடையலாம். பதவி உயர்வு சம்பள் உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும்.
திருவாதிரை:இன்று பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9