தினபலன்
மிதுனம் - 06-04-2023
இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங் களை படிப்பது வெற்றிக்கு உதவும்.வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: மக்கள் தொடர்புத் துறையில் இருக்கும் நபர்களுக்கு மீண்டும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கலாம்.
திருவாதிரை: மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மிக நல்ல நாளாக அமையும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: மகிழ்ச்சி கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6