மிதுனம் - 07-03-2023
இன்று அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றிபெறும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று தாய் மற்றும் தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கி உற்சாகம் துளிர்விடும். எவருக்காகவும் பரிந்து பேசுவதோ ஜாமின் கையெழுத்து போடுவதோ கூடவே கூடாது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பழக்கம் வைக்கும் போது கவனமாக இருக்கவும். அவர்களை நம்பி எந்த பெரிய முடிவும் எடுக்க கூடாது. கணவன் மனைவிக்குள் அனுசரித்து போகவும்.
திருவாதிரை:இன்று பணவரவு அதிகரிக்கும். வீண் செலவுகளை செய்யாதீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை சில நாட்கள் தள்ளி போடவும். பொது இடத்தில் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்யும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீர்நிலைகளில் செல்லும்போதும் கவனம் தேவை. எதிலும் யோசித்து செயல்படவும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று நீங்கள் நல்லது சொன்னாலும் செய்தாலும் விமர்சனம் செய்யப்படலாம். கவனம். நீங்கள் யாருக்கெல்லாம் நல்லது செய்தீர்களோ அவர்களில் சிலர் அதையெல்லாம் மறந்து விட்டு சண்டையிடலாம். யாரிடமும் அளவாகப் பழகுங்கள். ஆடை அணிகலன்கள் சேரும். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க அனுகூல்யம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5