மிதுனம் - 11-03-2023
இன்று எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்:இன்று வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம் வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. திருவாதிரை:இன்று தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள் கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்:இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3