தினபலன்
மிதுனம் - 24-01-2023
இன்று வாகனங்கள் வாங்குவதில் தடை ஏற்பட்டு நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: பணவரத்து திருப்தி தரும்.
திருவாதிரை: தெய்வபக்தி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பயணங்கள் மகிழ்ச்சிதரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9