தினபலன்
மிதுனம் - 24-04-2023
இன்று பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
திருவாதிரை: தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3