தினபலன்
மிதுனம் - 29-01-2023
இன்று எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எல்லா காரியங்களும் நல்ல படியாக நடக்கும். எடுத்து கொண்ட வேலைகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவு ஏற்படும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம்.
மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள்: கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
திருவாதிரை: வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும்.
புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்: கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6