துலாம் - 07-03-2023
இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பண வரத்தில் நிறைவு இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும்.
சித்திரை 3, 4ம் பாதங்கள்:இன்று உங்கள் பராக்கிரமம் வெளிப்படும். செயலில் வேகம் பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நிறைவேறும். அரசியல்வாதிகள் அரசுப்பணியாளர்கள் நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்கள் ரசாயனத் துறைகளில் உள்ளவர்கள் விஞ்ஞானிகள் ஆகியோர் தங்கள் துறைகளில் வளர்ச்சி காண்பார்கள்.
ஸ்வாதி:இன்று நிலம் வீடு மனை வாகனம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையோ அல்லது அவற்றால் ஆதாயமோ கிடைக்கப் பெறுவார்கள். மாணவமணிகள் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக்
காண்பார்கள். கலைத்துறையினர் எண்ணம் ஈடேறும். சமுதாய நலப்பணியாளர்களுக்குப் பாராட்டுகள் குவியும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்:இன்று வெளியூர் வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் தரும். பணநடமாட்டம் சீராக இருந்து வரும். இடமாற்றம் நிலைமாற்றம் ஆகியவை சிலருக்கு ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒவ்வொருவரால் அனுகூலம் ஏற்படும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9