தினபலன்
துலாம் - 24-01-2023
இன்று வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர். புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு.
சித்திரை 3, 4ம் பாதங்கள்: நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்.
ஸ்வாதி: கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும்.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்: குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9