தினபலன்
மீனம் - 31 01 2023
இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக் கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத்தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
பூரட்டாதி 4ம் பாதம்: சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.
உத்திரட்டாதி: குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும்.
ரேவதி: கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9