தினபலன்
தனுசு - 22-01-2023
இன்று உத்தியோகஸ்தர்கள் அதிலும் அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மூலம்: குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.
பூராடம்: கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம்.
உத்திராடம் 1ம் பாதம்: பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5