தினபலன்
ரிஷபம் - 01-01-2023
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: இன்று வாகனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரோஹிணி: இன்று எதிர்ப்பார்த்த பணவரவு தாமதமாக கிடைக்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்:இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9