தினபலன்
ரிஷபம் - 18-02-2023
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும்போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள்.
ரோஹிணி: கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9