தினபலன்
ரிஷபம் - 27-04-2023
இன்று மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை நீங்கும். திடீர் கோபம் ஏற்படலாம். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும்.மற்றவர்கள் செய்கைகளால் மனவருத்தம் உண்டாகலாம். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
கிருத்திகை 2, 3, 4ம் பாதங்கள்: குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சகஜமான நிலை காணப்படும்.
ரோஹிணி: கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள்: பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9