தினபலன்
கன்னி - 21-01-2023
இன்று கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழி ஏற்படும். நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக்கவலைகள் அனைத்தும் தீரும். உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை பளு குறையும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
ஹஸ்தம்: கணவன் மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்: பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9