தினபலன்
கன்னி - 22-01-2023
இன்று தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
ஹஸ்தம்: வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6